India vs Nepal Asia Cup 2023 : அடுத்த சுற்றுக்கு முன்னேறுமா இந்தியா?

India vs Nepal Asia Cup 2023 : பலக்கலே மைதானத்தில் இந்தியா – நேபாளம் போட்டி நடைபெறவுள்ளதால் கண்டியில் வானிலை நிலவரம் குறித்து பார்க்கலாம்.

India vs Nepal Asia Cup 2023 :

இந்த வருட ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய இரண்டு நாட்டில் கோலாகலமாக நடந்து வருகிறது. இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்ப பி.சி.சி.ஐ முன்வராததால், வேறு வழியின்றி ஹைபிரிட் மாடலில் ஆசிய கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இலங்கையில் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் மழை பெய்யும் என்று கூறியும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் பாகிஸ்தான் பேச்சை கேட்கவில்லை என்று கூறப்படுகிறது.

இலங்கைக்கு பதிலாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பாகிஸ்தான் அறிவுறுத்தியுள்ளது. ஆனால், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் அதிகளவு வெப்பம் இருக்கும் என்று ஆசிய கிரிக்கெட் கவுன்சில் திமிர்த்தனமாக பதிலளித்ததாக கூறப்படுகிறது. இலங்கையில் உள்ள பலக்கலே மைதானத்தில் நடைபெற இருந்த இந்தியா – பாகிஸ்தான் போட்டி மழையால் கைவிடப்பட்டது. இந்நிலையில் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி நேபாள அணியை எதிர்கொள்கிறது.

India vs Nepal Asia Cup 2023 : இந்தப் போட்டியும் கண்டி பலக்கலே மைதானத்தில் நடைபெறவுள்ளது. பாலக்கலே மைதானத்தைப் பொறுத்தவரை முதல் சில ஓவர்கள் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாகவும், நடு ஓவர்கள் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. முதலில் பேட்டிங் செய்யும் அணிகள் பெரும்பாலும் வெற்றி பெறுகின்றன என்று தரவு சொல்கிறது. இதனால் டாஸ் வெல்லும் அணி பேட்டிங்கை தேர்வு செய்யும் வாய்ப்பு உள்ளது

ஆனால் போட்டி நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏனெனில் நேற்றும் கண்டியில் கனமழை பெய்தது. இன்று மழை பெய்ய 70 சதவீதம் வாய்ப்பு உள்ளதால், இந்தியா – நேபாளம் போட்டி நடைபெறுவது சந்தேகம் என கூறப்படுகிறது. அதேபோன்று பலக்கலே மைதானத்தில் மணிக்கு 15 முதல் 25 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இந்தியா – நேபாளம் போட்டியுடன் இந்தியா – பாகிஸ்தான் போட்டியும் கைவிடப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக பார்க்கப்படுகிறது. இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டி கைவிடப்பட்டதால் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் மற்றும் பிசிசிஐ கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

இப்போது மற்றொரு போட்டி மழையால் கைவிடப்பட்டால், இந்திய ரசிகர்கள் கலக்கத்தில் இருப்பார்கள் என்பது உறுதி. அதுமட்டுமின்றி இந்திய அணி ஒரு போட்டியில் கூட வெற்றி பெற்றால் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Slideshows

Leave a Reply