India vs New Zealand மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி
India vs New Zealand இடையேயான ஒருநாள் போட்டிகள் இதுவரை இரண்டு முறை நடைபெற்றுள்ளது. இந்த இரண்டு முறையும் இந்திய அணியானது வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியானது நேற்று நடைபெற்றது. இந்த போட்டியானது மத்தியபிரதேசம் மாநிலம் இந்தூரில் நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணியானது முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்த பந்து வீச்சை தும்சம் செய்து இந்திய அணியானது 385 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணியின் தொடக்க ஆட்ட வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகிய இருவரும் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெளிப்படுத்தினர்.

கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் அடுத்தடுத்து சதம் அடித்து நியூசிலாந்து அணிக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார்கள். ரோஹித் சர்மா 101 ரங்களும் மற்றும் சுப்மன் கில் 112 ரன்களும் அடித்தனர். இதனை தொடர்ந்து அடுத்ததாக இறங்கிய இஷான் கிஷான், விராட் கோலி, சூரிய குமார் யாதவ் ஆகியோர் உடனுக்குடன் ஆட்டமிழந்து ஏமாற்றத்தை அளித்தனர். இதை தொடர்ந்து ஹர்திக் பாண்டியா மற்றும் ஷர்துல் தாக்கூர் அணியின் ஸ்கோரை உயர்த்தினார்கள். பாண்டியா 38 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார். 50 ஓவர் முடிவில் இந்திய அணி 385 ரன்களை பதிவு செய்துள்ளது.
இதனைத்தொடர்ந்து 386 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் துவக்க ஆட்ட வீரர் தேவன் கான்வே ஆட்டத்தை வெளிப்படுத்தி நம்பிக்கை அளித்தார். இவர் 138 ரன்களில் ஆட்டமிழந்தார். ஹென்றி நிக்கோலஸ் 42 ரன்கள் மற்றும் டேரில் மிட்செல் 24 ரன்கள் அடித்து ஆறுதல் அளித்தனர். இதன்பிறகு விக்கெட்டுகள் சரிந்தன. அதிரடியாக ஆடிய பிரேஸ்வெல் 26 ரன்களும் மற்றும் சான்டனர் 34 ரங்களிலும் ஆட்டமிழந்தனர்.
41.2 ஓவர்கள் தாக்குப்பிடித்து நியூசிலாந்து அணியானது 295 ரன்கள் மட்டுமே எடுத்தன. இந்திய அணியானது 90 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.