India vs New Zealand 2nd Test : இன்று தொடங்கியது இந்தியா - நியூசிலாந்து 2வது டெஸ்ட் தொடர்

India vs New Zealand 2nd Test

இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி (India vs New Zealand 2nd Test) புனேயில் இன்று தொடங்குகிறது.

இந்தியா - நியூசிலாந்து டெஸ்ட்

இந்தியாவிற்கு வந்துள்ள நியூசிலாந்து அணியானது 3 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. பெங்களூருவில் நடந்த முதல் டெஸ்டில் நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. இந்நிலையில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி (India vs New Zealand 2nd Test) மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இந்நிலையில் போட்டி தற்போது நடந்து வருகிறது.

இந்திய அணியில் இன்றைய போட்டியில் சர்ப்ராஸ்கான் அல்லது கே.எல்.ராகுல் யாருக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல் டெஸ்டில் சதம் அடித்த சர்ப்ராஸ்கானுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்திய டெஸ்ட் அணியில் விளையாடும் பதினொன்றில் இருந்து கே.எல்.ராகுல் நீக்கப்பட்டுள்ளார். இது ஒரு பெரிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது. அவரது இடத்தை சர்ப்ராஸ் கான் பிடித்தார். வரும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரிலும் கே.எல்.ராகுலுக்கு வாய்ப்பு கிடைக்காது என தெரிகிறது.

பேட்டிங்கில் கம்பேக் தருமா இந்தியா

இந்திய அணியை பொறுத்த வரையில் இந்திய அணியின் பேட்டிங் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. முதல் இன்னிங்சில் சொதப்பிய ஜெய்ஸ்வால், சர்ப்ராஸ் கான், விராட் கோலி ஆகியோர் கடந்த போட்டியில் இரண்டாவது இன்னிங்சில் சிறப்பாக விளையாடினர். ரிஷப் பண்ட் மற்றும் சர்ப்ராஸ் கான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருப்பினும், மூத்த வீரருமான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் பெரிய இன்னிங்ஸ் விளையாட வேண்டும். இந்திய அணியில் சுப்மன் கில் நுழைந்தது அணிக்கு மிகப்பெரிய பலமாக கருதப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply