India vs West Indies 2nd T20: வெற்றி பெற்று முன்னிலை பெருமா வெஸ்ட் இண்டீஸ்?

India vs West Indies 2nd T20 :

இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் போட்டியில் எதிர்பாராத விதமாக தோல்வியை சந்தித்தது ரசிகர்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் அந்த போட்டிக்கு பழி வாங்கும் நேரம் தற்போது அமைந்துள்ளது. அந்த அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டி இன்று இரவு நடைபெற உள்ளது. இதற்காக இந்திய அணி எப்படி தயாராகின்றது, எப்படி விளையாட போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம். அடுத்து நடந்த ஒரு நாள் தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இறுதியாக டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே முதல் போட்டியை வென்று வெஸ்ட் இண்டீஸ் அணி முன்னிலையில் உள்ளது. இதில் ஏற்கனவே நடந்த முதல் போட்டியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி போன்ற சீனியர் பிளேயர்கள் விளையாடவில்லை. சென்ற போட்டியில் நடந்த தோல்வியினால் இந்த போட்டியில் அவர்கள் களமிறங்க அதிக வாய்ப்பு உள்ளது. சென்ற போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையில் இந்திய அணி களமிறங்கியது. முதல் போட்டியில் இந்திய அணி அருகில் சென்று தோல்வி சந்தித்தது.

இந்த தோல்விக்கு மோசமான பேட்டிங் மட்டும்தான் காரணம் என்று கூறப்படுகிறது. ஏனெனில் வெஸ்ட் இண்டீஸ் போன்ற எளிய அணிகளுடன் 150 ரன்கள் கூட சேஸ் செய்ய முடியாமல் தோற்றுப்போனது பெரிதும் ஏமாற்றம் அளிக்கிறது. இதனால் இந்த போட்டியில் பதிலடி கொடுக்க இந்திய அணி தயாராக உள்ளது. கண்டிப்பாக டாஸ் வெற்றி பெறும் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்ய அதிக வாய்ப்புள்ளது. எப்போதுமே இந்திய அணி விளையாடும் வீரர்களில் அதிக மாற்றங்களை மாற்றம் செய்யாத அணி. இதனால் இந்த போட்டியிலும் அதே 11 பேர் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பதிலடி கொடுக்குமா இந்தியா? :

India vs West Indies 2nd T20 : சென்ற போட்டியில் இந்திய அணிக்கு ஓபனிங் பேட்டிங் சரியாக அமையவில்லை. இதில் மற்றும் கிஷான் இருவருமே நல்ல தொடக்கத்தை கொடுக்க தவறிவிட்டனர். அது மட்டுமல்லாமல் அனுபவ வீரர் சூர்யா குமார் யாதவ் பொறுப்பாக விளையாடவில்லை. ஹர்திக் பாண்டியா, சாம்சன் போன்ற வீரர்கள் கூட ஜொலிக்கவில்லை. அறிமுகப் போட்டியில் களம் இறங்கிய திலக் வர்மா அற்புதமாக விளையாடி அவர் மட்டும் அணிக்கு ஆறுதல் அளித்தார். சென்ற போட்டியில் ஆல் ரவுண்டர் இல்லாதது இந்திய அணிக்கு பெரும் இழப்பாக இருந்தது. கடந்த போட்டியில் செய்த தவறுகள் அனைத்தையும் திருத்திக் கொண்டு இந்த போட்டியில் நிச்சயம் வெற்றி பெற இந்திய அணி ஆர்வமாக இருக்கும்.

Latest Slideshows

Leave a Reply