India Vs West Indies 2nd Test: வரலாற்று சாதனை படைத்த ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால்...

வரலாற்று சாதனை :

இந்த போட்டியில் அதிவேகமான நூறு ரன்கள் குவித்து ஓப்பனிங் பேட்டிங்கில் சாதனை படைத்தது இந்தியா.

இந்த போட்டியில் முதன் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி அதிரடியாக விளையாடி 438 ரன்கள் குவித்தது. விராட் கோலி அபாரமாக விளையாடி தனது 76 வது சதத்தை பூர்த்தி செய்தார். அவர் 121 ரன்கள் குவித்தார், கேப்டன் ரோகித் சர்மா அவர்களும் 80 ரன்கள் விளாசினார். அடுத்த முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி ஆரம்பத்தில் நிதானமாக விளையாடினாலும் இறுதியில் சிராஜின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் வீழ்ந்தது. இந்திய அணியில் முகமது சிராஜ் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 255 ரன்கள் எடுத்தது. இதனால் 183 ரன்கள் முன்னிலை பெற்று இந்தியா ஆடியது. நேற்று இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கிய இந்திய அணி அதிரடியாக ரன்கள் குவித்தது. ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் அபாரமாக ஆட வேண்டும் என்ற முடிவுடன் வந்தனர். முதல் ஓவரிலேயே அதிரடி காட்ட ஆரம்பித்தது. முதல் ஓவரில் ஜெய்ஸ்வால் ஒரு சிக்சர் மற்றும் ஒரு பவுண்டரி அடித்தார். அதற்குப் பிறகு ரோகித் சர்மா  அதிரடி காட்ட ஸ்கோர் மல மல வென உயர்ந்தது. இதனால் இந்திய அணியின் பேட்டிங் T20 போல் தெரிந்தது.

ரோகித் சர்மா அரைசதம் :

ரோகித் சர்மா சிக்சரும் பவுண்டரியமாக அடிக்க இந்திய அணி 5 ஓவர்களில் 50 ரன்கள் தாண்டியது. தொடர்ந்து அருமையாக விளையாடிய சர்மா வெறும் 35 பந்துகளில் அரை சதம் குவித்தார். அவர் 57 ரன்களில் விக்கெட்டை பறி கொடுத்தார். அடுத்ததாக கில் ஆட வந்தார். இரு இளம் வீரர்களும் தொடர்ந்து அதிரடியாக விளையாடியதன் மூலம் இந்திய அணி வரலாற்று சாதனை அடைந்தது. இந்திய அணி அதிரடியாக விளையாடி நூறு ரன்களை 12 ஓவர்களில் கடந்தது. இது டெஸ்ட் கிரிக்கெட் பொருத்தவரை வரலாற்று சாதனையாகும். இதற்கு முன்னதாக இலங்கை அணி பங்களாதேஷ் அணிக்கு எதிராக 13 ஓவர்களில் நூறு ரன்கள் அடித்தது சாதனையாக இருந்தது.

இந்த குறுகிய நேர அதிரடி முடிந்ததும்  கிசான் களம் இறங்கினார். அவரும் தனது பங்கிற்கு அரை சதம் அடிக்க இந்திய அணி 180 ரன்கள் டிக்ளேர் செய்தது. அடிக்கடி மழை வந்ததால் சீக்கிரம் டிக்ளேர் செய்தது இந்திய அணி. அடுத்ததாக களம் இறங்கி வெஸ்ட் இண்டீஸ் அணி 76 ரன்களில் இருந்த போது இரண்டு விக்கெட்டுகளை இழந்திருந்தது. ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் இன்று நடைபெற உள்ளது.

Latest Slideshows

Leave a Reply