India Vs West Indies 3rd ODI: வெஸ்ட் இண்டீஸ் அணியை அலறவிட்ட இந்தியா...

India Vs West Indies 3rd ODI :

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 351 ரன்கள் குவித்தது. இந்த நாள் இந்திய அணி 200 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இது மட்டுமல்லாமல் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை கைப்பற்றியது.

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இடையான கடைசி ஒரு நாள் போட்டி லாரா மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்றது. கடந்த போட்டியில் மோசமாக தோற்று விமர்சனத்திற்கு உள்ளான இந்திய அணி பேட்டிங் இன்றைய போட்டியில் பலமாக தெரிந்தது. ஆரம்பத்திலேயே அதிரடி காட்ட ஆரம்பித்த இந்திய அணி பேட்ஸ்மேன்கள் பவுலர்களை அலறவிட்டனர். குறிப்பாக இசான் கிஷான் கடந்த போட்டியை போன்று வெளுத்து வாங்க ஆரம்பித்தார். இவரும் சுப்மன் கில் இருவரும் இணைந்து எதிரணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். அடுத்ததாக களம் இறங்கிய ருத்ராஜ் சோபிக்க தவறினார். நீண்ட நாட்களுக்குப் பிறகு வழங்கப்பட்ட வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்தவில்லை. இவர் எட்டு ரன்களில் வெளியேறினார். ஆனால் அடுத்ததாக களம் இறங்கிய  சாம்சன் அதிரடியாக ரன்களை சேர்த்தார்.  கிஷான் 77 ரன்களில் வெளியேறினார். அடுத்ததாக களம் இறங்கிய ஹர்திக் பாண்டியா அவர்களும் தனது பங்கிற்கு அதிரடி காட்ட ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. இதனால் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 350 ரன்களை குவித்தது.

வெஸ்ட் இண்டீஸ் அணி சேசிங் :

பிறகு மிகவும் கடினமான இலக்கை நோக்கி ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியால் சரியாக பேட்டிங் செய்ய முடியவில்லை. கடந்த போட்டியில் எளிதான ஸ்கோர் என்பதால் அடித்துவிட்டனர். அறிமுக வீரர் முகேஷ் குமார் ஆரம்ப ஓவரிலேயே தனது முதல் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். தொடர்ந்து அடுத்த ஓவரிலும் விக்கெட்டுகளை வீழ்த்த வெஸ்ட் இண்டீஸ் அணி தடுமாறியது. அடுத்து களம் இறங்கிய அந்த அணியின் கேப்டன் ஹோப் ஐந்து ரன்களில் வெளியேறினார். வெஸ்ட் இண்டீஸ் அணியால் இதிலிருந்து எழ முடியவில்லை. இறுதியில் 151 ரன்களில் ஆட்டம் இழந்தது. இதன் மூலம் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த தொடரின் தொடர் நாயகன் விருதை கிஷான் கைப்பற்றினார்.

Latest Slideshows

Leave a Reply