India vs West Indies First Test : இந்திய அணியில் புதிதாக இரண்டு வீரர்கள் அறிமுகம்…

டெஸ்ட் சாம்பியன்ஷிப் முடிந்தவுடன் நீண்ட ஓய்வுக்குப் பிறகு இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதலில் வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் செய்ய உள்ளது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி ஸ்லோ பிட்ச் என்பதால் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இருந்தாலும் போட்டிக்கு முன்னர் சற்று நேரம் மழை பெய்ததால் முதல் இரண்டு மணி நேரம் சற்று பேட்டிங் செய்ய கடினமாக இருக்கும். இந்திய அணியின் பந்து வீச்சை வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் எப்படி சமாளிக்க போகிறது என்று பார்க்கலாம். எப்படியும் முதலில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 200 ரன்களுக்குள் ஆல் அவுட் செய்ய இந்தியா காத்திருக்கும்.

இஷான் கிஷன் ஜெய்ஸ்வால் அறிமுகம் :

இன்றைய ஆட்டத்தில் ஜெய்ஸ்வால் மற்றும் விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் அறிமுக வீரர்களாக விளையாட உள்ளனர். இந்திய கேப்டன் ரோகித் சர்மா அவர்கள் இருவருக்கும் அறிமுக தொப்பியை வழங்கி வரவேற்றார். தற்போதைய நிலையில் டாசின் போது இந்திய கேப்டன் ரோகித் சர்மா இளம் வீரர்களுக்கு இது நல்ல பயிற்சியாக இருக்கும் என்று கூறினார். அது மட்டுமல்லாமல் இறுதியாக நடந்த இரண்டு டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கும் நாங்கள் முன்னேறியுள்ளோம்.

நாங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை சிறப்பாக செயல்பட்டு வருகிறோம் என்பதை குறிக்கிறது. இதேபோன்று இன்னும் பல இளைஞர்கள் தங்கள் கிரிக்கெட் பயணத்தை தொடங்க உள்ளனர். நாங்கள் எங்கள் பயிற்சிக்காக நான்கு நாட்கள் முன்னதாகவே இங்கே வந்து விட்டோம். ஆனால் மழை காரணமாக சரியாக பயிற்சி செய்ய முடியவில்லை என ரோகித் சர்மா கூறினார்.

வெஸ்ட் இண்டீஸ் ஆதிக்கம் :

கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் வெஸ்ட் இண்டீஸ் அணி தனது சொந்த மைதானத்தில் தோற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Slideshows

Leave a Reply