India Won the Zimbabwe T20 Series : ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்தியா வென்றது

இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு சர்வதேச டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. 5 டி20 போட்டி கொண்ட தொடரில் 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி (India Won the Zimbabwe T20 Series) சாதனைப் படைத்துள்ளது. இந்த போட்டியில் பல சீனியர் வீரர்கள் இல்லாத நிலையில் சுப்மன் கில் தலைமையில் இந்திய அணி களம் இறங்கியது. இந்த தொடரில் முதல் ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்றது. அடுத்த நடைபெற்ற 3 ஆட்டங்களிலும் இந்தியா ஜிம்பாப்வே அணியை வெளுத்து வாங்கியது.

India vs Zimbabwe 5th T20 :

5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஜிம்பாப்வே அணி 1 ஆட்டத்திலும் இந்தியா 3 போட்டிகளிலும் வெற்றி பெற்ற நிலையில் இந்தியா – ஜிம்பாப்வே இடையேயான டி20 தொடரின் 5வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று மாலை ஹராரே மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. இந்திய அணி தரப்பில் ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் களம் இறங்கினார்கள்.

சாம்சன் அரை சதம் :

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய சஞ்சு சாம்சன் 45 பந்துகளில் 58 ரன்கள் குவித்தார். இதில் 4 சிக்ஸர் ஒரு பவுண்டரி அடங்கும். அவருடன் கைகோர்த்த ரியான் பராக் 24 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார். இதில் ஒரு சிக்ஸர் அடங்கும். கடைசியில் அதிரடியாக ஆடிய ஷிவம் துபே 2 சிக்ஸர், 2 பவுண்டரி உடன் 12 பந்துகளில் 26 ரன்கள் குவித்தார். ஜிம்பாப்வே அணியின் தரப்பில் பிளெசிங் 2 விக்கெட் மற்றும் சிக்கந்தர் ராஸா, பிராண்டன், ரிச்சர்ட் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

ஜிம்பாப்வே தோல்வி :

அடுத்து 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே 18.3 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஜிம்பாப்வே அணி தரப்பில் டியன் மயர்ஸ் 34 ரன்னும், மருமனி 27 ரன்னும், ஃபராஸ் அக்ரம் 27 ரன்னும், பென்னட் 10 ரன்னும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் முகேஷ் குமார் 4 விக்கெட் வீழ்த்தினார். ஷிவம் துபே 2 விக்கெட்டும், வாசிங்டன் சுந்தர், அபிஷேக் சர்மா, துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினார்கள்.

India Won the Zimbabwe T20 Series :

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரையும் 4-1 என்ற கணக்கில் (India Won the Zimbabwe T20 Series) கைப்பற்றியது. தொடர் நாயகனாக தமிழகத்தை சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Latest Slideshows

Leave a Reply