India World Cup 2023 Squad : World Cup போட்டியில் விளையாடும் இந்திய அணியை நேற்று அறிவித்தது BCCI

India World Cup 2023 Squad :

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது (India World Cup 2023 Squad). ரோஹித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் அறிவித்துள்ளார். 2023 ஐசிசி உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் (India World Cup 2023 Squad) அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 10 ஆம் தேதி முடிவடையும். இது சென்னை, பெங்களூரு, மும்பை, அகமதாபாத், கொல்கத்தா, ஹைதராபாத், டெல்லி, தர்மசாலா, லக்னோ மற்றும் புனே ஆகிய 10 மைதானங்களில் நடைபெறும்.

India World Cup 2023 Squad : இந்த நிலையில் ரோகித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறை ரிசர்வ் வீரர்களை கூட பிசிசிஐ அறிவிக்கவில்லை. வீரர்களுக்கு காயம் ஏற்பட்டால், பின்னர் மாற்றம் செய்யப்படும் என தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார். இந்திய அணியில் காயத்தில் இருந்து திரும்பிய கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் உலக கோப்பை அணியில் இடம் பிடித்துள்ளனர். அணியில் உள்ள 15 வீரர்களும் முழு உடற்தகுதியுடன் இருப்பதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

அணியின் சமநிலை நன்றாக இருப்பதாகவும், பேட்டிங்கில் ஆழம் இருக்கும் வகையில் அணி உருவாகி இருப்பதாகவும் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில் சிறப்பாக விளையாடிய இஷான் கிஷான் விக்கெட் கீப்பராக சேர்க்கப்பட்டுள்ளார். சஞ்சு சாம்சன், திலக் வர்மா போன்ற வீரர்களுக்கு அணியில் இடம் வழங்கப்படவில்லை.

12 ஆண்டுகளுக்குப் பிறகு, 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்தியா சாம்பியன் பட்டம் வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். விராட் கோலி, ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா ஷ்ரேயாஸ் ஐயர், கில், சூர்யகுமார், இஷான் கிஷான் ஆகியோர் அணியில் பலம் வாய்ந்த வீரர்கள். இவர்கள் அனைவரும் இந்திய ஆடுகளத்தில் சிறப்பாக விளையாட முடியும்.

பந்துவீச்சில் முகமது சிராஜ், ஷமி, பும்ரா ஆகியோர் உள்ளனர். இந்திய ஆடுகளம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான சூழலை வழங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் ஜடேஜா குல்தீப் யாதவ், அக்சர் படேல் போன்ற வீரர்கள் இருப்பது இந்தியாவுக்கு பலமாக கருதப்படுகிறது. இந்த அணியின் மாஸ் மற்றும் பலம் என்று பார்த்தால் அது வீரர்களின் அனுபவம் மட்டுமே.

இந்த நிலையில் இந்த அணியில் உள்ள குறைகளை இப்போது பார்க்கலாம். முதல் ஏழு அணியில் இடம் பெற்றுள்ள ஒரே இடது கை பேட்ஸ்மேன் ஜடேஜா மட்டுமே. இரண்டாவது இடது கை பேட்ஸ்மேனாக இஷான் கிசான் சேர்க்கப்பட்டால், ஷ்ரேயாஸ் ஐயர் அல்லது ராகுல் ஆகிய இருவரில் ஒருவர் விளையாடும் நெசவுக்கு வெளியே உட்காருவார்.

Latest Slideshows

Leave a Reply