Indian 2 Movie Review : இந்தியன் 2 திரைப்படத்தின் திரை விமர்சனம்

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தியன் 2 திரைப்படம் வெளிநாடுகள் மற்றும் தமிழ்நாட்டை தவிர பிற மாநிலங்களில் அதிகாலை காட்சிகள் ஆரம்பித்த நிலையில், முதல் காட்சியில் இருந்து கிளைமாக்ஸ் காட்சி வரை வழக்கம் போல் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தங்களது விமர்சனங்களை குவிக்க ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் படம் எப்படி இருக்கு (Indian 2 Movie Review) என்பதை தற்போது காணலாம்.

இந்தியன் 2 :

28 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமாக இந்தியன் 2 திரைப்படத்தை ஷங்கர் இயக்கியுள்ளார். பிக்பாஸ் முதல் சீசனின் போது அறிவிக்கப்பட்ட இந்தப் படம், 7 சீசன்களும் முடிந்த நிலையில், ஒரு வழியாக பல போராட்டங்களை தாண்டி கடைசி நேரத்தில் வர்மக் கலை ஆசான் தொடுத்த வழக்கையும் தாண்டி இப்படம் இன்று வெளியாகி உள்ளது. இப்படத்தில் ரகுல் பிரீத் சிங், சித்தார்த், எஸ்.ஜே.சூர்யா, காஜல் அகர்வால், விவேக், பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் இந்தியன் 2 படத்தின் ரசிகர்கள் தங்களது விமர்சனங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். விக்ரம் படத்தை திரையரங்குகளில் கொண்டாடிய கமல்ஹாசன் ரசிகர்கள் இந்தியன் 2-வை கொண்டாடாமல் இருப்பார்களா? ‘தாத்தா வராரு கதற விடப் போறாரு’ என வெளி மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் டிஜே போட்டு படத்தை கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் இந்த படத்தின் சிறப்பம்சங்கள் மற்றும் குறைகள் குறித்து ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.

Indian 2 Movie Review - இந்தியன் 2 திரைவிமர்சனம் :

இந்தியன் 2 படத்திற்கு புதிய டைட்டில் கார்டு உருவாக்கப்பட்டது. இது கமல் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இந்தியன் 2 படத்தின் முதல் பாகத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த பின்னணி இசை சில காட்சிகளில் அப்படியே பயன்படுத்தப்பட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. ஒரு பக்கம் அனிருத் இன்னொரு பக்கம் ஏ.ஆர்.ரகுமான் என ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுத்துள்ளனர். இந்தியன் 2 படத்தின் முதல் பாகத்தில் ஷங்கர் படத்திற்கே உரிய வழக்கமான எமோஷன் மற்றும் மாஸ் காட்சிகள் நிறைந்துள்ளன. சித்தார்த்தின் காட்சிகளும், கமலின் என்ட்ரியும் சிறப்பாக அமைந்துள்ளன. இரண்டாம் பாதியில் வரும் சண்டைக் காட்சிகள், குறிப்பாக க்ளைமாக்ஸ் இந்தியன் 2 படத்திற்கு பெரும் பாசிட்டிவ் என்று ரசிகர்கள் கருதுகின்றனர். இந்தியன் 2 திரைப்படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. பிரமாண்டமான பாடல் காட்சிகள், கமலின் எண்டரி, சித்தார்த், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளதாக ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Latest Slideshows

Leave a Reply