Indian 2 Trailer Release Date : இந்தியன் 2 திரைப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்தியன் 2 திரைப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் தேதியை (Indian 2 Trailer Release Date) படக்குழு அறிவித்துள்ளது. கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் இந்தியன் இரண்டாம் பாகம். பிரம்மாண்ட இயக்கத்திற்கு பெயர் போன இயக்குனர் ஷங்கர் இந்த படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தில் கமலுடன் ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சித்தார்த், விவேக், மனோபாலா, பாபி சிம்ஹா, எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ரெட் ஜெயண்ட் நிறுவனமும், லைகா நிறுவனமும் இணைந்து படத்தைத் தயாரித்துள்ளன. சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் பல நட்சத்திரங்களும் கலந்து கொண்டனர். இந்தியன் 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி ஒவ்வொரு நாளும் படக்குழு பல்வேறு அப்டேட்களை வெளியிட்டு வருகிறது.

இந்தியன் 2 ரிலீஸ் தேதி :

லைக்கா மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இந்தியன்-2 திரைப்படம் வரும் ஜூலை 12 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

இந்தியன் 2 டீசர் :

முன்னதாக, கடந்த ஆண்டு இந்தியன் 2 படத்தின் டீசர் நவம்பர் 23 ஆம் தேதி வெளியாகி ட்ரெண்டானது. கமல்ஹாசன் வெளிநாட்டில் இருந்து ஒரு தொலைபேசி பூத்தில் பேசத் தொடங்குவதாக டீசர் தொடங்கியது. அதில் கமல்ஹாசன் நரைத்த தலைமுடி மற்றும் மீசையுடன் வயதான தோற்றத்தில் காணப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Indian 2 Trailer Release Date - இந்தியன் 2 ட்ரெய்லர் ரிலீஸ் தேதி :

சமீபத்தில் இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இப்படத்தில் இடம்பெற்ற கதறல்கள் மற்றும் பாரா பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வைரலானது. இந்நிலையில், ‘இந்தியன் 2’ படத்தின் ட்ரெய்லர் வரும் 25 ஆம் தேதி வெளியாகும் (Indian 2 Trailer Release Date) என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Latest Slideshows

Leave a Reply