Indian 2 Update : இந்தியன் 2 படத்தின் அப்டேட் வெளியீடு

Indian 2 Update :

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட்டை (Indian 2 Update) படக்குழு வெளியிட்டதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் இந்தியன் 2 ஆகும். லைக்கா புரொடக்ஷன்ஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. அதுமட்டுமின்றி கமல்ஹாசன் தனது போர்ஷனுக்கு டப்பிங் பேசி முடித்துள்ளார். இதையடுத்து கமலின் பிறந்தநாள் ஸ்பெஷலாக இந்தியன் 2 படத்தின் அப்டேட்டை (Indian 2 Update) படக்குழு கொடுத்துள்ளது.

உலக நாயகன் கமல்ஹாசன் தற்போது கல்கி, இந்தியன் 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதையடுத்து இயக்குனர்கள் வினோத், மணிரத்னம் படங்களில் ஆகியோரின் படங்களில் நடிக்க உள்ளார். இந்நிலையில் கமல்-ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில்,  கமல் தனது போர்ஷனுக்கான டப்பிங் கொடுத்துவிட்டார். கமல்-ஷங்கர் கூட்டணியில் 1996 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டானது. இந்த படத்தின் தொடர்ச்சி தான் இந்தியன் 2 என கூறப்படுகிறது. சுமார் 27 வருடங்களுக்கு பிறகு இந்தியன் 2 வெளியாக இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியன் 2 ஆம் பாகத்தில் கமலின் இந்தியன் தாத்தா கதாபாத்திரமான சேனாதிபதியின் சம்பவத்திற்க்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் இந்தியன் 2 படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட் (Indian 2 Update) வெளியாகி ரசிகர்களுக்கு ஹைப்பை கொடுத்துள்ளது. நவம்பர் 7ம் தேதி கமல்ஹாசனின் பிறந்தநாள் என்பதால் அதற்கு முன் இந்தியன் 2 அப்டேட்டை வெளியிட படக்குழு முடிவு (Indian 2 Update) செய்துள்ளது. அதன்படி இந்தியன் 2 படத்தின் இன்ட்ரோ கிளிம்ப்ஸ் நவம்பர் 3ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த க்ளிம்ப்ஸ் வீடியோவில் கமலின் இந்தியன் தாத்தா கெட்டப் இன்ட்ரோவாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைத் தொடர்ந்து மேலும் சில தரமான அப்டேட்கள் வெளியாகும் என்று கூறப்படுகிறது. ரசிகர்கள் முக்கியமாக இந்தியன் 2 ரிலீஸ் தேதிக்காக காத்திருக்கின்றனர். மறுபுறம் கமலின் பிறந்தநாள் ஸ்பெஷலாக மணிரத்னத்தின் KH 234 டீசரும் வெளியாகவுள்ளது.

ஒன்றன் பின் ஒன்றாக கமல் ரசிகர்களுக்கு தரமான விருந்துகள் வரிசையாக நிற்கின்றன. அதேபோல் கமல்-மணிரத்னம் நடிப்பில் வெளியான கிளாசிக் படமான நாயகன் திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்தியன் 2 கிளிம்ப்ஸ் அப்டேட் வெளியானதை தொடர்ந்து கமல், இந்தியன் 2 போன்ற ஹேஷ்டேக்குகள் ட்விட்டரில் ட்ரெண்டாகி (Indian 2 Update) வருகிறது.

Latest Slideshows

Leave a Reply