Indian Army Recruitment 2024 : இந்திய ராணுவத்தில் தொழில்பிரிவில் வேலைவாய்ப்பு

இந்திய ராணுவத்தின் தொழில்பிரிவிற்கான ஆட்சேர்ப்பு 2024-க்கான அறிவிப்பு (Indian Army Recruitment 2024) வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் இராணுவத்தில் நிரந்தர கமிஷனுக்கு தகுதியானவர்கள் ஆவார்கள். ராணுவத்தில் சேர என்னென்ன தகுதிகள், விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேர்வு பற்றிய விவரங்களை தற்போது காணலாம்.

Indian Army Recruitment 2024 - பணியிட விவரங்கள் :

  • தொழிநுட்ப பிரிவு விவரங்கள் : இந்திய ராணுவத்தின் தொழில்நுட்பப் பிரிவுக்கான 90 காலியிடங்கள் (Indian Army Recruitment 2024) வெளியாகியுள்ளது. ஆனால் பணியிடங்கள் மாறுபட வாய்ப்பு உள்ளது. இந்த பணிக்கு திருமணமாகாத ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். முதல் 4 ஆண்டுகளுக்கு பயிற்சி அளிக்கப்படும். அதன் பிறகு ராணுவத்தில் நிரந்தர கமிஷனுக்கு தகுதியுடையவர். பயிற்சிக் காலம் முடிந்ததும் இன்ஜினியர் டிகிரி வழங்கப்படும். 

  • வயது வரம்பு : விண்ணப்பதாரர்கள் 02.07.2005 – 01.07.2008 ஆகிய தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 16.5 வயது முதல் 19.5 வயது வரை இருக்கலாம்.

  • கல்வித்தகுதி : இந்திய ராணுவத்தில் தொழில்நுட்பப் பிரிவுக்கு 12ம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடங்களில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், 2024ஆம் ஆண்டுக்கான GEE தேர்வை எழுதியிருக்க வேண்டும்.

  • தேர்வுசெய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு, மருத்துவ பரிசோதனை மற்றும் உடற்தகுதி தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

  • விண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்கள் இந்திய ராணுவ இணையதளம் https://www.joinindianarmy.nic.in/ மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இந்திய ராணுவ தொழில்நுட்பக் பிரிவிற்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்த பிறகு, வழிமுறைகளை தெளிவாக படித்து ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

  • விண்ணப்பிக்க கடைசி தேதி : 13/06/2024.

Latest Slideshows

Leave a Reply