Indian Bank Apprentice Recruitment 2025 : இந்தியன் வங்கியில் 1500 பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கி சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. சுமார் 6000 கிளைகளுடன் இயங்கி வரும் இந்த வங்கியில் பல ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்நிலையில் இந்தியன் வங்கியில் காலியாக உள்ள பயிற்சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு (Indian Bank Apprentice Recruitment 2025) வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? கல்வி தகுதி? சம்பளம் உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

Indian Bank Apprentice Recruitment 2025

1.காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy)

இந்தியன் வங்கியில் காலியாக உள்ள பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கு மொத்தம் 1500 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் தமிழகத்தில் உள்ள கிளைகளுக்கு மட்டும் 277 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

2. கல்வி தகுதி (Educational Qualification)

இந்த பயிற்சி பணியிடங்களுக்கு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் (Degree) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பிக்கும் மாநிலத்தின் மொழி தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

3. வயது தகுதி (Age)

இந்தியன் வங்கியில் இந்த பயிற்சி பணியிடங்களுக்கு 20 வயது முதல் 28 வயதிற்குள் மிகாமல் (Indian Bank Apprentice Recruitment 2025) இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் அரசு விதிகளின்படி வயது வரம்பில் சலுகை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

4. சம்பளம் (Salary)

இந்த பயிற்சி பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு நகர்ப்புறங்களில் உள்ள கிளை என்றால் மாதம் ரூ.15,000 ஆயிரமும், ஊரகம் மற்றும் சிறுநகரங்கள் உள்ள கிளை என்றால் மாதம் ரூ.12,000 சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Indian Bank Apprentice Recruitment 2025 - Platform Tamil

5. தேர்வு செய்யப்படும் முறை (Selection Process)

இந்தியன் வங்கியில் இந்த பயிற்சி பணியிடங்களுக்கு ஆன்லைன் தேர்வு, உள்ளூர் மொழித்திறன் தேர்வு (Indian Bank Apprentice Recruitment 2025) ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள் எனவும், ஆன்லைன் தேர்வானது சென்னை, சேலம், திருச்சி, வேலூர், கோவை, தஞ்சை உள்ளிட்ட நகரங்களில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

6. விண்ணப்ப கட்டணம் (Application Fees)

இந்த பயிற்சி பணியிடங்களுக்கு தேர்வு கட்டணமாக பொதுப்பிரிவினருக்கு ரூ.800 ஆகவும், எஸ்/எஸ்டி பிரிவினருக்கு ரூ.175 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

7. விண்ணப்பிக்க கடைசி தேதி (Last Date)

இந்த பயிற்சி பணியிடங்களுக்கு ஆன்லைனில் 18.7.2025 தேதி முதல் 7.08.2025 தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Slideshows

Leave a Reply