Indian Bank Recruitment 2024 : 300 வங்கி அதிகாரி பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கியில் (Indian Bank) காலியாக உள்ள வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு (Indian Bank Recruitment 2024) அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் மொத்தம் 300 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மேலும் இந்த அறிவிப்பில் தமிழகத்திற்கு மட்டும் 160 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Indian Bank Recruitment 2024 :

  1. காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy) : இந்தியன் வங்கியில் காலியாக உள்ள வங்கி அதிகாரி (Bank Officer) பணியிடங்களுக்கு மொத்தம் 300 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

  2. கல்வித் தகுதி (Educational Qualification) : இந்த வங்கி அதிகாரி (Bank Officer) பணியிடங்களுக்கு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலைப் பட்டப்படிப்பு (UG) முடித்திருக்க வேண்டும்.

  3. வயதுத் தகுதி (Age) : இந்தியன் வங்கியில் இந்த வங்கி அதிகாரி (Bank Officer) பணியிடங்களுக்கு 01.08.2024 அன்று வரை 20 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் (Indian Bank Recruitment 2024) விண்ணப்பிக்கலாம். மேலும் ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  4. சம்பளம் (Salary) : இந்தியன் வங்கியில் இந்த வங்கி அதிகாரி (Bank Officer) பணியிடங்களுக்கு (Indian Bank Recruitment 2024) தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.48,480 முதல் ரூ.85,920/- வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  5. தேர்வு செய்யப்படும் முறை (Selection Process) : இந்த வங்கி அதிகாரி (Bank Officer) பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு (Written Test) மற்றும் நேர்முகத் தேர்வு (Interview) அடிப்படையில் மட்டுமே  தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  6. விண்ணப்பிக்கும் முறை (Application Process) : இந்த வங்கி அதிகாரி (Bank Officer) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.indianbank.in/ என்ற இணையதளப் பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

  7. விண்ணப்பக் கட்டணம் (Application Fees) : இந்த வங்கி அதிகாரி (Bank Officer) பணியிடங்களுக்கு விண்ணப்பக் கட்டணம் பொதுப்பிரிவினருக்கு ரூ.1000 ஆகவும், எஸ்.சி, எஸ்.டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.175 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  8. விண்ணப்பிக்க கடைசித் தேதி (Application Last Date) : இந்த வங்கி அதிகாரி (Bank Officer) பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 02.09.2024 ஆகும்.

  9. மேலும் விவரங்கள் அறிய :
    https://www.indianbank.in/ என்ற அதிகாரப்பூர்வ  இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

Latest Slideshows

Leave a Reply