Indian Bowlers : பவுலிங்கில் இந்தியா சாதனைக்கு மேல் சாதனை...

இந்தியா-ஆஸ்திரேலியா

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. மேலும் இந்த தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது. இந்த அபார வெற்றியின் மூலம் ஐசிசி ஒருநாள் தரவரிசையில் இந்தியா நம்பர் 1 அணியாக மாறியுள்ளது. இந்த போட்டியில் இந்திய பந்துவீச்சாளர்கள் மற்றும் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட்டனர். நான்கு இந்திய வீரர்கள் அரைசதம் அடித்தனர். முகமது ஷமி துல்லியமாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் இந்திய அணி ஒரு அரிய சாதனையை அடைய ஷமி காரணமானார்.

Indian Bowlers :

முகமது ஷமி

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் கே.எல்.ராகுல் முதலில் பந்துவீச முடிவு செய்தார், முகமது ஷமி இந்தியாவுக்காக சிறப்பாக பந்து வீசினார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 10 ஓவர்களில் 51 ரன்கள் மற்றும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

முதல் ஓவரிலேயே ஷமி சிறப்பாக பந்து வீசினார். ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரே போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்துவது இது இரண்டாவது முறையாகும். அவரது சிறப்பான ஆட்டத்திற்காக ஆட்ட நாயகன் விருது பெற்றார். அவர் மிட்செல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித், மார்கஸ் ஸ்டோனிஸ், மேத்யூ ஷார்ட் மற்றும் சீன் அபோட் ஆகியோரின் விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

Indian Bowlers : இந்திய வீரர்கள் இந்த மாதத்தில் மட்டும் மூன்று முறை ஒரே ஒருநாள் போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒருநாள் போட்டிகளில் ஒரே மாதத்தில் 3 பந்துவீச்சாளர்கள் 5 விக்கெட்டுகளை வீழ்த்துவது இதுவே முதல்முறை. 2023 ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன்பிறகு இறுதிப் போட்டியில் இலங்கைக்கு எதிராக 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் முகமது சிராஜ். இப்படி இந்திய பவுலர்கள் (Indian Bowlers) அசத்தி வரும் நேரத்தில் தற்போது முகமது சமி அவர்களும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அந்த சாதனையில் இடம் பிடித்துள்ளார்.

Latest Slideshows

Leave a Reply