Indian Captain Rohit Sharma : அஸ்வின் இனிமேல் விளையாட மாட்டாரா?

உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக இந்திய வீரர்கள் அஸ்வின், சாகல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் போன்ற வீரர்களுக்கான வாய்ப்புகள் இன்னும் முடியவில்லை. அவர்கள் கண்டிப்பாக வருகின்ற தொடர்களில் சிறப்பாக விளையாடி உலக கோப்பையில் இடம்பெற வாய்ப்புள்ளது. இவ்வாறு இந்திய கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். இதுவரை நடைபெற்றுள்ள தொடர்களில் ஒரு நாள் தொடர்களில் அஸ்வின் தேர்வு செய்யப்படவில்லை. டெஸ்ட் தொடர்களில் சிறப்பாக விளையாடும் அவருக்கு ஒரு நாள் தொடரில் அவ்வளவாக வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இந்த நிலையில் தற்போது ஆசிய கோப்பை தொடருக்காக விளையாடும் இந்திய அணியின் வீரர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் முன்னணி வீரர்களான அஸ்வின் மற்றும் சாகல் பெயர் இடம் பெறவில்லை. இது தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு பெரிதும் ஏமாற்றம் அளிக்கிறது. இளம் வீரர் வாஷிங்டன் சுந்தர் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வந்தாலும் இந்திய அணியில் அவருக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டே வருகின்றன.

ஆசிய கோப்பை :

ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 17 பேர் கொண்ட இந்த அணியில் ஏழு வீரர்கள் மும்பையில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதுவே மிகவும் சர்ச்சைக்குரிய ஒன்றாக தெரிகிறது. ஏனெனில் Indian Captain Rohit Sharma மற்றும் புதிய பயிற்சியாளர் அஜித் அகர்கர் ஆகியோர் மும்பையை சேர்ந்தவர்கள். இதனால் மும்பை வீரர்களை எடுத்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த அணியில் ஆப் ஸ்பின்னர்கள் யாரும் இல்லை. சைனா மேன் பவுலர் குல்திப் யாதவ் மட்டுமே இடம்பெற்றார்.

இதேபோன்று இலங்கையில் உள்ள மைதானங்களுக்கு விளையாட எதற்கு ஆறு வேகப்பந்துவீச்சாளர்கள் என்ற கேள்விக்குரியும் எழுந்துள்ளது.

இதேபோன்று தொடர்ந்து எல்லா வாய்ப்புகளையும் வீணடித்துள்ள சஞ்சு சாம்சன் அவர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அனுபவம் இல்லாத திலக் வர்மா என்று ஏகப்பட்ட சர்ச்சைக்குரிய வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆசியக் கோப்பை முடிவடைந்த உடன் பெரிதாக தொடர் ஒன்றும் இல்லாததால் அஸ்வினின் உலகக்கோப்பை கனவு தற்போது முடிவடைந்துள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Indian Captain Rohit Sharma :

Indian Captain Rohit Sharma : இது குறித்து கேப்டன் ரோகித் சர்மா பேசும்போது, தேர்வு குழுவில் அஸ்வின் மற்றும் சாகல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் என்று அனைவர் பற்றியும் நாங்கள் விவாதித்தோம். இதேபோன்று பேட்டிங் வரிசை சற்று அதிகமாக தேவைப்படுவதால் அக்சர் பட்டேல் போன்ற வீரர்களை தேர்வு செய்துள்ளோம். அதேபோன்று அவர் இடது கை பேட்ஸ்மேன் ஆக இருப்பது கூடுதல் பலமாகும். இதேபோன்று 18 வீரர்களில் இருந்து உலகக்கோப்பை தொடருக்கும் ஆட்கள் தேர்வு செய்யப்பட மாட்டாது. அதனால் அவர்களுக்கு உலக கோப்பையில் தேர்வாக இன்னும் பிரகாசமான வாய்ப்புள்ளது என்று Indian Captain Rohit Sharma தெரிவித்துள்ளார்.

Latest Slideshows

Leave a Reply