Indian Coast Guard Recruitment : கடலோர காவல் படையில் வேலைவாய்ப்பு 12-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

இந்தியாவை சுற்றியுள்ள கடல் வளங்களை பாதுகாக்க கடந்த 1978-ம் ஆண்டு இந்திய கடலோர காவல் படையானது உருவாக்கப்பட்டது. மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கடலோர காவல் படையில் ஏற்படும் காலிப்பணியிடங்களை அவ்வப்போது உரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது 140 காலிப்பணியிடங்களை (Indian Coast Guard Recruitment) நிரப்புவதற்கு அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது.

Indian Coast Guard Recruitment

1. காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy)

இந்திய கடலோர காவல் படையில் (Indian Coast Guard Recruitment) காலியாக உள்ள அசிஸ்டண்ட் கமாண்டன்ட் (Assistant Commandant) பணியிடங்களை நிரப்ப மொத்தம் 140 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

2. கல்வி தகுதி (Educational Qualification)

இந்த அசிஸ்டண்ட் கமாண்டன்ட் (Assistant Commandant) பணியிடங்களுக்கு (Indian Coast Guard Recruitment) அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 12-ஆம் வகுப்பில் வேதியியல், கணிதம், இயற்பியல் ஆகிய பாடப்பிரிவு எடுத்து படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பட்டப்படிப்புக்கு நிகராக டிப்ளமோ படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

3. வயது தகுதி (Age)

இந்த அசிஸ்டண்ட் கமாண்டன்ட் (Assistant Commandant) பணியிடங்களுக்கு 20 வயது முதல் 25 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும், தேர்வர்கள் 1.7.2000-ம் ஆண்டுக்கு பிறகும் 30.6.2024-ம் ஆண்டுக்கு முன்பும் பிறந்தவர்களாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

4. சம்பளம் (Salary)

கடலோர காவல் படையில் இந்த அசிஸ்டண்ட் கமாண்டன்ட் (Assistant Commandant) பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.56000/- சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

5. தேர்வு செய்யப்படும் முறை (Selection Process)

இந்த அசிஸ்டண்ட் கமாண்டன்ட் (Assistant Commandant) பணியிடங்களுக்கு (Indian Coast Guard Recruitment) பொது நுழைவுத்தேர்வு மற்றும் ஸ்டேஜ் 2, ஸ்டேஜ் 3 செலக்சன், மெடிக்கல் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

6. தேர்வு நடைபெறும் இடம் (Exam Center)

கடலோர காவல் படையில் இந்த அசிஸ்டண்ட் கமாண்டன்ட் (Assistant Commandant) பணியிடங்களுக்கு தேர்வானது சென்னை, மும்பை, கொல்கத்தா, கோவா, ஷில்லாங், நொய்டா, குஜராத் ஆகிய நகரங்களில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

7. விண்ணப்பிக்க கட்டணம் (Application Fees)

இந்திய கடலோர காவல் படையில் இந்த அசிஸ்டண்ட் கமாண்டன்ட் (Assistant Commandant) பணியிடங்களுக்கு (Indian Coast Guard Recruitment) விண்ணப்ப கட்டணமாக ரூ.300 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  

8. விண்ணப்பிக்க கடைசித் தேதி (Last Date)

கடலோர காவல் படையில் இந்த அசிஸ்டண்ட் கமாண்டன்ட் (Assistant Commandant) பணியிடங்களுக்கு 5.12.2024 தேதி முதல் 24.12.2024 தேதி வரை விண்ணப்பித்து கொள்ளலாம்.

9. மேலும் விவரங்களுக்கு

https://joinindiancoastguard.cdac.in/cgcat/- என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பார்வையிடவும்.

Latest Slideshows

Leave a Reply