Indian Cricket Team Selection : அணியை தேர்ந்தெடுப்பதில் மன வருத்தம் ஏற்படுகிறது.. இந்திய அணி பயிற்சியாளர் டிராவிட் வருத்தம்...

இந்திய அணி கடந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் தோற்றது குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. விளையாடும் 11 பேரை தேர்ந்தெடுப்பதில் அரசியல் நடந்ததாக பல்வேறு கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன‌.

இதுகுறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறுகையில் இந்திய அணியை தேர்வு செய்யும் போது எந்தவித அரசியலும் நடைபெறவில்லை மாறாக மன வருத்தம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியிருக்கிறார். டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் அஸ்வின் ஏன் இடம்பெறவில்லை என்ற கேள்வி அனைவரின் மனதில் எழுந்தது.

இது போன்ற பெரிய தருணங்களில் பல வீரர்களை நாம் அணியில் சேர்ப்பதில்லை. இதுவே நாம் ஐசிசி தொடர்களில் பெரிய வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணம் என பழைய வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

வருத்தம் மட்டும் தான் நிகழும் :

இது குறித்து முதல் முறையாக பணம் திறந்து உள்ள டிராவிட் நான் ஒவ்வொரு வீரருக்கும் பயிற்சி தரும்போது அவர்கள் மீதான அக்கறையுடன் செயல்படுவேன். இந்தியாவின் பயிற்சியாளராக நான் எப்போதும் அணியின் வெற்றிக்கு முழுமையாக போராடுவேன். ஆனால் உண்மை என்னவென்றால் பயிற்சியின் மூலம் மட்டுமே நாம் ஒரு வெற்றியாளராக வர முடியாது. சில சமயங்களில் கடினமான முடிவுகளை முக்கிய தருணங்களில் எடுத்து தான் ஆக வேண்டும்.

நாங்கள் விளையாடும் அணியை தேர்வு செய்யும்போது ரசிகர்கள் பலருக்கும் ஏமாற்றம் அடையலாம். ஏனெனில் இந்திய அணியில் பல திறமையான வீரர்கள் இருப்பதால் அணியை தேர்ந்தெடுப்பதில் பல கஷ்டம் நிகழும். பல வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகலாம். நானும் ஒரு ரசிகனாக இருந்திருந்தால் அனைவருக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கலாம் என உங்களை போல தான் வருத்தப்படுவேன். ஆனால் அப்படி ஒன்றும் சரியான 11 வீரர்களை தேர்வு செய்திட முடியாது.

ஒரு பயிற்சியாளராக பல்வேறு கடினமான தருணம் எனக்கு வந்துள்ளது. அனைத்து வீரர்களுக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் எனில் நாம் எப்படி 11 வீரர்களை தேர்வு செய்வது. அப்படி இருக்கும்போது ஏன் இந்த வீரர்களை தேர்வு செய்யவில்லை என அனைவரும் கேட்கும் போது பதில் சொல்வது எளிதல்ல.

சாகா குறித்து டிராவிட் :

விக்கெட் கீப்பரை தேர்ந்தெடுக்கும் போது சாகாவை ஏன் தேர்ந்தெடுக்கவில்லை என்ற காரணத்தை அவரிடமே சொல்லிவிட நினைத்தேன். வீரர்கள் தேர்ந்தெடுப்பில் எந்தவித அரசியலும் நடைபெறவில்லை. சற்று மன வருத்தம் மட்டுமே நிகழ்வதாக டிராவிட் வருத்தம் தெரிவித்துள்ளார்.

Latest Slideshows

Leave a Reply