Indian Fans Abusing Pakistan Player : இந்திய ரசிகர்களின் தவறான நடத்தை

ஐ.சி.சி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டியின் போது பாகிஸ்தான் வீரர்களிடம் (Indian Fans Abusing Pakistan Player) ரசிகர்கள் சிலர் தவறாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், முகமது ரிஸ்வான் ஆட்டமிழந்து பெவிலியன் நோக்கி நடந்தபோது, அங்கிருந்த ரசிகர்கள் சிலர் ரிஸ்வானுக்கு ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

Indian Fans Abusing Pakistan Player

Indian Fans Abusing Pakistan Player : மேலும், பாகிஸ்தான் வீரர்கள் பீல்டிங் செய்யும் போது ரசிகர்கள் பேப்பர் ராக்கெட்டுகளை வீசுவது போன்ற பல சம்பவங்கள் நடந்துள்ளன, ஆனால் பிசிசிஐ இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், அகமதாபாத்தில் தங்கள் வீரர்களிடம் ரசிகர்கள் வன்முறையாக நடந்து கொண்டதாக பாகிஸ்தான் தரப்பில் இருந்து ஐசிசிக்கு அதிகாரப்பூர்வ புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு நடந்து கொள்ள வேண்டாம் என அகமதாபாத் கிரிக்கெட் அதிகாரிகள் வீரர்களுக்கு அறிவுறுத்தவில்லை என்றும், இது தொடர்பாக பிசிசிஐ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் குற்றம் சாட்டியுள்ளது. இந்த புகாரை ஐசிசி ஏற்று விசாரணை நடத்தும் என்று தெரிகிறது. இதன்படி எதிரணி வீரர்களிடம் தகாத முறையில் நடந்து கொள்ளும் வீரர் மீது ஐசிசி குறிப்பிட்ட காலம் தடை விதிக்கலாம்.

மேலும் வீரர்களுக்கு பாதுகாப்பற்ற மைதானம் என்று முடிவு செய்து இந்த மைதானத்தில் போட்டிகள் நடத்தாமல் புறக்கணிக்கவும் வாய்ப்புள்ளது. மேலும் பாகிஸ்தான் வீரர்களிடம் தவறாக நடந்து கொண்ட ரசிகர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து பிசிசிஐயிடம் ஐசிசி அறிக்கை கேட்கும். விசாரணைக்கு பிறகு இந்த மூன்றில் ஏதாவது ஒன்று நடக்க வாய்ப்பு உள்ளது. இந்நிலையில், உலகக் கோப்பை இறுதிப் போட்டி அகமதாபாத்தில் நடைபெறவுள்ள நிலையில், பாகிஸ்தான் அளித்துள்ள புகார் (Indian Fans Abusing Pakistan Player) பிசிசிஐ-க்கு பெரும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒருவேளை பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு வந்து, அகமதாபாத்தில் விளையாட மாட்டோம் என்று போர்க்கொடி தூக்கினால், அது பிசிசிஐக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்துவது நிச்சயம்.

Latest Slideshows

Leave a Reply