Indian Films Festival : ஆஸ்கர் அருங்காட்சியகத்தில் இந்திய திரைப்படங்கள் மார்ச் 8 முதல் ஏப்ரல் 20 வரை திரையிடப்படவுள்ளது

ஆஸ்கர் விருதுகளை வழங்கும் அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் ஆனது முதல் முறையாக 12 இந்தியத் திரைப்படங்களை ஆஸ்கர் அகாடமி அருங்காட்சியகத்தில் மார்ச் 8 முதல் ஏப்ரல் 20 வரை (Indian Films Festival) திரையிடப்படவுள்ளது. இந்த நிறுவனம் ஆனது இந்திய திரைப்படங்களுக்கான திரைவிழாவை முதன்முறையாக ஒருங்கிணைக்கிறது. நிகழவிருக்கும் இந்த திரைவிழாவில் மணிரத்னத்தின் இயக்கத்தில் 1997-ல் வெளியான மோகன்லால், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், தபு உள்ளிட்டோர் நடித்த ‘இருவர்’ திரைப்படம் திரையிடப்படவுள்ளது.

12 இந்தியத் திரைப்படங்கள்

லாஸ் ஏஞ்சல்ஸில் இருக்கும் இந்த ஆஸ்கர் அகாடமி அருங்காட்சியகம் `Emotion in color: A Kaleidoscope of Indian Cinema’ என்ற பிரிவின் கீழ் தேர்வுசெய்துள்ள இந்த 12 இந்தியப் படங்களைத் திரையிடவிருக்கிறது. இந்தத் திரையிடல் பட்டியலில் பல வகையான இந்தியத் திரைப்படங்கள் (Indian Films Festival) இடம் பெற்றிருக்கின்றன. மேலும் இயக்குநர் சிவேந்திர சிங் துர்காபூர் திரையிடப்பட உள்ள 12 இந்தியத் திரைப்படங்களை தேர்வுசெய்துள்ளார்.

12 இந்தியப் படங்களின் பட்டியல்

Indian Films Festival - Platform Tamil

● March 7 – 1987-ல் வெளியான `மதர் இந்தியா’

● March 10 – 1976-ல் வெளியான `மந்தன்’

● அதே March 10-ம் தேதி – 1977-ல் வெளியான `அமர் அக்பர் அந்தோணி’

● March 11 – 1990-ல் வெளியான `இஷனோ’ என்ற மணிப்பூரி திரைப்படம்

● March 14 – 1979-ல் வெளியான `குமட்டி’ என்ற மலையாள திரைப்படம்

● March 18 – 1987-ல் வெளியான `மிர்ச்சி மசாலா’ என்ற இந்தித் திரைப்படம்

● March 20 – 1995-ம் ஆண்டு (Indian Films Festival) வெளியான `தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே’ என்ற இந்தி திரைப்படம்.

● March 22 – 2002-ம் ஆண்டு வெளியான `தேவ்தாஸ்’ என்ற இந்தித் திரைப்படம்

● March 31- 2008-ல் வெளியான `ஜோதா அக்பர்’ இந்தி மொழி திரைப்படம்

● April 5 – 1962-ம் ஆண்டு வெளியான இயக்குநர் சத்யஜித் ரேவின் `கஞ்செஞ்சுங்கா’ என்ற வங்க மொழித் திரைப்படம்

● April 8 – 1972-ம் ஆண்டு வெளியான `மாய தர்பன்’ என்ற திரைப்படம்.

● April 19 – 1997-ம் ஆண்டு வெளியான மணிரத்னத்தின் `இருவர் ‘ என்ற தமிழ் திரைப்படம்

இருவர் திரைப்படம்

இருவர் திரைப்படம்தான் இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் ஒரே தமிழ் திரைப்படம் ஆகும். இறுதி நாளான ஏப்ரல் 19-ம் தேதி மணிரத்னத்தின் இருவர் தமிழ் திரைப்படம் திரையிடப்பட உள்ளது. 1997-ல் வெளியான ‘இருவர் முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., மு.கருணாநிதி ஆகியோரின் வாழ்க்கை நிகழ்வுகளை (Indian Films Festival) அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும். இப்படத்தில் திராவிட இயக்கத் தலைவர்களை இயக்குநர் மணிரத்னம் சித்தரித்த விதம் விமர்சனத்துக்குள்ளான போதும் இன்றுவரை இந்தப் படம் தமிழ் சினிமாவின் கிளாசிக்குகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஆஸ்கர் அகாடமி அருங்காட்சியகம் இது போன்ற திரைப்படங்களை திரையிடுவது வழக்கமாக நடைபெறுவதுதான் என்றபோதும் இந்திய சினிமா வரலாற்றில் ஒரே சமயத்தில் 12 இந்தியப் படங்கள் திரையிடப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.

Latest Slideshows

Leave a Reply