Indian Player Sanju Samson : வாய்ப்பை வீணடிக்காதீர்கள் | சஞ்சு சாம்சனுக்கு முன்னாள் வீரர்கள் அறிவுரை...

உலகக் கோப்பை தொடர் இந்த வருடம் இந்தியாவில் தொடங்க உள்ளது. இதற்கான இந்திய அணி வீரர்கள் பட்டியலில் விக்கெட் கீப்பர் இடத்தில் ரிஷப் பண்ட் இல்லாத காரணத்தால் காலியாக உள்ளது. ரிஷப் பண்ட் அவர்கள் கடந்த வருடம் நடந்த விபத்தால் இன்னும் அணிக்கு திரும்பாமல் உள்ளார்.

இதனால் அந்த விக்கெட் கீப்பர் இடத்தில் யாரை களம் இறக்கப் போகிறார்கள் என்று கேள்வி இன்னும் இந்திய அணியில் இருந்துள்ளது. காயத்திலிருந்து மீண்டு வந்த கே.எல்.ராகுல் தற்போது பயிற்சி ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இடம் பெற்ற சஞ்சு சாம்சன் அவர்கள் தற்போது சரியாக விளையாடவில்லை. தற்போது நிலைமை பொறுத்த வரை கேப்டன் ரோகித் சர்மா, நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி, ஆல் ரவுண்டர் ஜடேஜா இவர்கள் பெயர் மட்டும் தான் ரெடியாக உள்ளது.

மற்றபடி உள்ள வீரர்கள் அனைவரும் இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடர் மற்றும் அடுத்து நடக்க உள்ள ஆசியக் கோப்பை தொடரை பொருத்து தான் இடம் பெறுவார்களா இல்லையா என்பதை முடிவு செய்ய முடியும். அதன்படி சுழல் பந்துவீச்சாளர்கள் குல்தீப் மற்றும் சாகல் ஆகியோர் இருவரும் வாய்ப்பு பெற நல்ல சூழ்நிலை நிலவுகிறது. இவர்கள் இருவரும் இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் கலக்கி வருகிறார்கள்.

இதற்கு அடுத்த நிலையில் நடு வரிசையில் பேட்ஸ்மேன் ஆகவும் விக்கெட் கீப்பராகவும் யார் செயல்படுகிறார்கள் என்பது குறித்து இன்னும் தெளிவாக முடிவு செய்யப்படவில்லை. இந்த போட்டியில் இஷன் கிஷான் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் இருக்கின்றனர். இதில் கிஷான் தொடர்ந்து அரை சதங்களாக அடித்து நல்ல ஃபார்மில் உள்ளார். இதனால் சஞ்சு சாம்சன் அவர்கள் அனைத்து வாய்ப்பையும் வீணடித்துக் கொண்டிருக்கிறார்.

Indian Player Sanju Samson - ஆகாஷ் சோப்ரா கருத்து :

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் Indian Player Sanju Samson அவர்களுக்கு அறிவுரை சொல்லி வருகிறார்கள். இதில் ஆகாஷ் சோப்ரா அவர்கள் கூறியபடி, நீங்கள் உங்கள் வாய்ப்பை வீணடித்துக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் ரன் அடிக்கவில்லை என்றால் பின்னால் அதிகம் வருத்தப்படுவீர்கள். இல்லையென்றால் உலகக் கோப்பை தொடரில் கிஷான் உங்கள் வாய்ப்பை பெற்று விடுவார். இவ்வாறு ஆகாஷ் சோப்ரா அவர்கள் சஞ்சு சாம்சனுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Latest Slideshows

Leave a Reply