Indian Space Station : நாசாவுக்கு 'இந்தியா தான் சிறந்த கூட்டாளி'

சர்வதேச விண்வெளி நிலையத்தை (International Space Station) விண்வெளியில் நிறுவுவதை அமெரிக்காவின் நாசா (NASA) ஒரு கனவு திட்டமாக வைத்திருந்து. பல முயற்சிகளுக்கு பிறகு அந்த கனவு நிஜமானது. இப்போது இந்தியாவும் அதற்கு சொந்தமான இஸ்ரோ சர்வதேச விண்வெளி நிலையத்தை (ISRO) விரைவில் நிறுவப்போகிறது. இந்தியா தனக்கு சொந்தமாக விண்வெளி நிலையத்தை (Indian Space Station) அமைக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான திட்டங்களை வரும் 2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் செய்து முடிக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இந்தியா அமைக்கவுள்ள விண்வெளி ஆய்வு மையத்திற்கு விண்வெளி வீரர்களை (Indian Astronauts) அனுப்பவும் திட்டம் தீட்டி வருகிறது.

விண்வெளி வீரர்களுக்கு மிகவும் தலைசிறந்த பயிற்சி வழங்க வேண்டும் என்றால் அதற்கு விண்வெளி ஆராய்ச்சியில் அதிக அனுபவம் கொண்ட நாடான அமெரிக்காவின் (America) உதவி கட்டாயம் இந்தியாவிற்கு தேவைப்படும். அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் தொடர்பான அனைத்து பயிற்சிகளையும் இந்திய வீரர்களுக்கு நாசா (NASA) வழங்கவுள்ளது. இந்த நோக்கத்திற்காக நாசாவும் இஸ்ரோவும் கைகோர்க்கவுள்ளன. 

இந்திய விண்வெளி நிலையம் (Indian Space Station) :

இஸ்ரோ திட்டப்படி வரும் 2035 ஆண்டுக்குள் இந்திய விண்வெளி நிலையத்தை (Indian Space Station) அமைக்கவும் அதனை தொடர்ந்து வரும் 2040 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இந்திய வீரர்கள் அல்லது ஒரு இந்தியரையாவது நிலவுக்கு (Moon) அனுப்பவும் முடிவு செய்துள்ளது. இதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையம் இப்போதிலிருந்தே துவங்கிவிட்டது என்று கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நாசா நிர்வாக அதிகாரி பில் நெல்சன் (Bill Nelson) இதுகுறித்து கூறுகையில் இந்தியாவின் சொந்த விண்வெளி நிலையத்தை (Indian Space Station) அமைக்க நாசாவும் அமெரிக்காவும் தயாராக உள்ளது என்று அவர் தெரிவித்திருக்கிறார். மேலும் இஸ்ரோ திட்டமிட்டுள்ளபடி அடுத்த ஆண்டு இறுதிக்குள் ஒரு இந்திய விண்வெளி வீரரை நாசா அதன் சொந்த ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அழைத்து செல்லும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்துடன் இணைந்து இஸ்ரோ உருவாக்கவிருக்கும் அதன் சொந்த விண்வெளி நிலையத்தை (Indian Space Station) உருவாக்கவும் நாசா உதவி செய்யும் என்று அவர் கூறியுள்ளார். எதிர்காலத்தில் இஸ்ரோவுடன் இணைந்து மேலும் பல முக்கிய திட்டங்களை நாசா மேற்கொள்ளும் என்றும் நாசா தெரிவித்துள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான (NISAR) வரும் 2024 ஆண்டில் முதல் காலாண்டில் ஒரு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த உள்ளது.

விண்வெளி நிலையம் செல்லும் முதல் இந்திய வீரர் யார்?

இந்த புதிய செயற்கைக்கோளை விண்ணில் ஏவ இஸ்ரோ நாசாவுடன் கூட்டு சேர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இந்தியாவிற்கு பெரும் சவால் அடுத்த ஆண்டு சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு International Space Station (ISS) அனுப்ப ஒரு தகுதியான விண்வெளி வீரரை இஸ்ரோ கண்டுபிடிக்க வேண்டும். இந்தியாவின் முதல் விண்வெளி வீரரை தேர்வுசெய்யும் பணியிலும் நாசா பங்கேற்கும் என்று கூறப்படுகிறது. இந்தியாவின் முதல் விண்வெளி வீரரை தேர்வு செய்யும் முயற்சியில் இஸ்ரோ இப்போது தீவிரமாக களமிறங்கியுள்ளது. இஸ்ரோ தனது பணிகளை மிகவும் வேகமாக நகர்த்தி வருகிறது. அதேபோல் இஸ்ரோவின் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் ககன்யான் (Gaganyaan Mission) திட்டதின் முக்கியமான சேஃப்டி மாட்யூல் (Safety Module) சோதனையிலும் நாசா உதவவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Slideshows

Leave a Reply