Indian Team Batting : 97 பந்துகளாக பௌண்டரி அடிக்காத இந்திய அணி

Indian Team Batting :

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி 97 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட அடிக்க முடியாமல் திணறியது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை (Indian Team Batting) ஏற்படுத்தியுள்ளது. இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான உலகக் கோப்பை இறுதிப் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் களம் இறங்கிய இந்திய அணியில் ரோகித் சர்மா-சுப்மான் கில் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 30 ரன்கள் சேர்த்தது. தொடக்க வீரர் சுப்மான் கில் 4 ரன்களில் ஆட்டமிழந்தார்.

Indian Team Batting : விராட் கோலி-ரோஹித் சர்மா கூட்டணி தொடர்ந்து ரன் சேர்த்தது. ரோகித் சர்மா வழக்கம்போல் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். இதையடுத்து, மேக்ஸ்வெல்லை பவுண்டரிக்கு அடித்தார் ஸ்ரேயாஸ் ஐயர். இதனால் இந்திய அணி 10 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 80 ரன்கள் சேர்த்தது. பின்னர் 4 ரன்களில் ஸ்ரேயாஸ் ஐயர் ஆட்டமிழந்தார். பின்னர் இணைந்த விராட் கோலி-கே.எல் ராகுல் பார்ட்னர்ஷிப் விக்கெட்டுகளை மட்டும் விட்டுக்கொடுக்காமல் நிதானமாக விளையாடியது. 11 முதல் 20 ஓவர்கள் வரை ஒரு பவுண்டரி கூட அடிக்காமல் ரன் சேர்த்தனர். மொத்தம் 11 முதல் 20 ஓவர்கள் வரை 35 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்டது. இதையடுத்து இந்திய அணியின் விராட் கோலியும், கே.எல்.ராகுலும் பவுண்டரி அடிக்க முயன்றனர். ஆனால் ஆஸ்திரேலிய வீரர்கள் அனைவரும் சிறுத்தை போல் ஓடி எல்லையில் பீல்டிங் செய்தனர். இதன் காரணமாக இந்திய அணியின் ரன்ரேட் சரிவரவில்லை. ஒரு கட்டத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் இருவரும் பவுண்டரி அடிக்கத் தவறியதால், அகமதாபாத் ரசிகர்களின் ஆரவாரம் தொடர்ந்து குறைந்து கொண்டே (Indian Team Batting) வந்தது. இறுதியாக மேக்ஸ்வெல் வீசிய 27வது ஓவரில் கேஎல் ராகுல் பவுண்டரி அடித்தார். இதன் மூலம் இந்திய அணி 97 பந்துகளுக்கு பிறகு முதல் பவுண்டரியை எட்டியது.

Latest Slideshows

Leave a Reply