Indian Team Captain Pandya Complaint: அடிப்படை வசதிகளையாவது செய்யுங்கள்...

Indian Team Captain Pandya Complaint :

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி நிர்வாகத்தின் மீது இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா புகார் தெரிவித்துள்ளார். போட்டியின் போது தங்களுக்கு அடிப்படை வசதி கூட செய்து தரவில்லை எனவும் ஆடம்பர வசதிகள் கூட வேண்டாம் எனும் தெரிவித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் மீது புகார் :

வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடருக்குப் பிறகு இந்திய அணி வீரர்கள் ஒரு நாள் தொடருக்கு புறப்பட்டனர். நான்கு மணி நேரம் தாமதத்திற்கு பிறகு விமானம் புறப்பட்டுள்ளதாக ஹர்திக் பாண்டியா வேதனை அடைந்துள்ளார். இதனால் வெகு நேரமாக விமான நிலையத்தில் காத்திருந்ததாக தெரிவித்து இருந்தார். இதனால் சரியான தூக்கம் இன்றி ஹோட்டல் அறைக்கு வந்துள்ளனர். இதன் காரணமாக அவ்வளவு ஆக பயிற்சி செய்ய முடியவில்லை. இதனால் இந்திய அணி கோபமடைந்து நம் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு கடிதம் அனுப்பி உள்ளது. இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது. இப்படிப்பட்ட வசதியின்மையில் கூட இந்திய அணி இளம் வீரர்கள் அற்புதமாக விளையாடியுள்ளனர்.

அடிப்படை வசதிகள் வேண்டும் :

இந்தத் தொடரை கைப்பற்றிய பிறகு கேப்டன் பாண்டியா பேசும்போது, நாங்கள் மைதானத்தில் இருக்கும் போதே மிக அருமையாக இருந்தது. வெளியே சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது மிகவும் சிரமம் ஏற்பட்டது. அடுத்த முறையாவது வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு வரும்போது பயண வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும். கடந்த முறையும் இது போன்ற பல சிக்கல்களை சந்தித்தோம். அடுத்த முறையாவது இது போன்ற சிக்கல்களை தவிர்க்க வேண்டும். நாங்கள் ஒன்றும் ஆடம்பர வசதிகளை கேட்கவில்லை. ஒரு சிறிய அடிப்படை வசதிகள் தான் கேட்டோம். இந்த அடிப்படை வசதிகள் சரியாக இருந்தால் தான் நாம் ஒழுங்காக பயிற்சியில் ஈடுபட முடியும். இதனை தவிர்த்து பார்த்தால் வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் விளையாடுவது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று தெரிவித்திருந்தார்.

Latest Slideshows

Leave a Reply