Indian Team Captain Rohit Sharma : வெளுத்து வாங்கிய ரோஹித் சர்மா...

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா (Indian Team Captain Rohit Sharma) தனது பேட்டிங் குறித்த விமர்சனங்களுக்கு தனது அதிரடியால் பதிலளித்தார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், அதே பந்துவீச்சை குறிவைத்து தொடர்ந்து ஐந்து பந்துகளில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 26 ரன்கள் சேர்த்துள்ளார்.

இந்தியா பேட்டிங் :

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான ஆட்டம் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஜோடியான ரோஹித் சர்மா மற்றும் சப்மான் கில் ஆகியோர் பாகிஸ்தானின் வலுவான வேகப்பந்து வீச்சில் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

கில்லின் அதிரடி விளையாட்டு :

கில் எப்போதும் நிதானமாக விளையாடத் தொடங்கி, பிறகு அதிரடி காட்டுகிறார். ஆனால், இந்தப் போட்டியில் பவுண்டரியில் ரன் குவிப்பேன் என்று சபதம் போட்டது போல் தொடர்ந்து பவுண்டரி மழை பொழிந்தார். அவர் 52 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 58 ரன்கள் எடுத்தார்.

Indian Team Captain Rohit Sharma :

Indian Team Captain Rohit Sharma : மறுபுறம், ரோஹித் சர்மா முதல் 10 ரன்களை ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரியுடன் அடித்தார், அதன் பிறகு அவர் நீண்ட நேரம் பந்துகளை வீணடித்தார். ஆனால் சுழல் பாகிஸ்தான் பந்துவீச்சைப் பயன்படுத்தத் தொடங்கியபோது அவர் தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ஷதாப் கான் வீசிய 13வது ஓவரின் கடைசி மூன்று பந்துகளில் ரோஹித் 2 சிக்ஸர், ஒரு பவுண்டரி விளாசினார். அந்த ஓவரில் 19 ரன்கள் எடுக்கப்பட்டது. அடுத்து ஷதாப் கான் 15 வது ஓவரை வீசினார். பின்னர் அந்த ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி அடித்தார் ரோஹித். ஷதாப் கான் பந்துவீச்சில் ரோஹித் 26 ரன்கள் எடுத்தார், தொடர்ந்து ஐந்து பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகள் அடித்தார்.

Latest Slideshows

Leave a Reply