Indian Team New Captain : இந்திய அணியின் கேப்டன் யார்? சஸ்பென்ஸ் வைத்த கம்பீர்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா பங்கேற்க முடியாமல் போனால் அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா (Indian Team New Captain) இந்திய அணியை வழிநடத்துவார் என இந்திய அணியின் பயிற்சியாளர் கம்பீர் தெரிவித்துள்ளார்.

இந்தியா தொடர் தோல்வி

பயிற்சியாளராக கம்பீர் பொறுப்பேற்றதில் இருந்து இந்திய அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. குறிப்பாக 27 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்தது. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 0-3 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்தது. இதன் காரணமாக இந்திய அணி மீது கடும் விமர்சனம் வைக்கப்பட்டது. இதில் குறிப்பாக பயிற்சியாளர் கம்பீர், கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் மூத்த வீரர் விராட் கோலி ஆகியோர் மீது ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர். இந்நிலையில் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 22ம் தேதி பெர்த் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதனால் இந்திய அணியில் இருந்து (Indian Team New Captain) வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் இன்று ஆஸ்திரேலியாவுக்கு புறப்படுகின்றனர்.

கவுதம் கம்பீர் செய்தியாளர் சந்திப்பு

இந்நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் (Indian Team New Captain) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இந்திய அணியின் சமீபத்திய தோல்விகள் குறித்து கம்பீரிடம் செய்தியாளர்கள் சரமாரியான கேள்விகளை கேட்டனர். இதற்கு பொறுமையாக பதிலளித்த கம்பீர் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் ஏற்பட்ட தோல்வியை சமாளிக்கப் போவதில்லை. நீங்கள் எங்கள் மீது வைக்கும் விமர்சனங்களுக்கு நாங்கள் தகுதியானவர்கள் தான். அந்த தோல்வியை மறந்துவிட்டு முன்னேற விரும்புகிறோம். எனக்கும் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு  இடையேயான உறவு நல்ல நிலையில் தான் இருக்கிறது.

ரோஹித் மற்றும் விராட் கோலி குறித்து நான் கவலைப்படவில்லை. இருவரும் போராடும் குணம் கொண்டவர்கள். இன்னும் கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களிடம் உள்ளது. வெளியில் இருந்து வரும் விமர்சனங்களைப் பற்றி நான் கவலைப்படவில்லை என்றார்.

இந்திய அணியின் புதிய கேப்டன் யார் (Indian Team New Captain)

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா பங்கேற்க முடியாவிட்டால் அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா (Indian Team New Captain) இந்திய அணியை வழிநடத்துவார். மேலும் ரோஹித்துக்கு பதிலாக ஜெய்ஸ்வாலுடன் அபிமன்யூ ஈஸ்வரன் அல்லது கே.எல் ராகுல் ஆகிய இருவரில் ஒருவர் தொடக்க வீரராக களமிறங்கலாம் என்று தெரிவித்துள்ளார். மேலும் கே.எல்.ராகுலைப் பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர் கே.எல். ராகுல் போன்ற ஒரு வீரரை மற்ற அணிகளில் காட்டுங்கள் பார்க்கலாம். அவரை எங்கு வேண்டுமானாலும் ஆட வைக்கலாம். அப்படிப்பட்ட திறமை அவரிடம் இருக்கிறது என்று கம்பீர் தெரிவித்துள்ளார்.

Latest Slideshows

Leave a Reply