India's First AI Blood Test Launched : இந்தியாவின் முதல் AI இரத்த பரிசோதனை மையம் ஹைதராபாத்தில் நிறுவப்பட்டுள்ளது

இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence) அடிப்படையிலான இரத்த பரிசோதனை மையம் ஹைதராபாத்தில் உள்ள நிலோஃபர் மருத்துவமனையில் (India’s First AI Blood Test Launched) தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஏஐ கருவி மூலம் சில விநாடிகளில், ஊசி இல்லாமல் இரத்த பரிசோதனை எளிமையாக செய்ய முடியும். தற்போது அனைத்து துறைகளையும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஆட்டிப் படைத்து வருகிறது. அந்த வகையில் செயற்கை நுண்ணறிவு மருத்துவத் துறையையும் விட்டுவைக்கவில்லை. மேலும் நாள்தோறும் மருத்துவத் துறையில் செயற்கை நுண்ணறிவு புதிய சாதனைகளை படைத்தது வருகிறது.

முதல் AI இரத்த பரிசோதனை மையம் (India's First AI Blood Test Launched)

ஹைதராபாத்தில் உள்ள பிரபல மருத்துவமனையான நிலோஃபர் மருத்துவமனையில், ஊசி மற்றும் ஆய்வகங்கள் இல்லாமல் 1 நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் இரத்த பரிசோதனையை நடத்தும் செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான நோயறிதல் கருவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மருத்துவ தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனமான குயிக் வைட்டல்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ‘அம்ருத் ஸ்வஸ்த் பாரத்’ என்ற AI கருவியானது மருத்துவ துறையின் மேம்பட்ட ஃபேஸ் ஸ்கேனிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 20 முதல் 60 வினாடிகளில் மனிதர்களின் 1 சொட்டு இரத்தம் கூட இல்லாமல், துல்லியமான இரத்த பரிசோதனை முடிவுகளை வழங்குகிறது.

இந்த Amrut Swast Bharat செயற்கை நுண்ணறிவு (AI) கருவி வழக்கமான இரத்த பரிசோதனை போல் இல்லாமல், ஃபோட்டோ பிளெதிஸ்மோ கிராஃபி (Photo Plethysmo Graphy) என்ற தொழில்நுட்பம் மூலமாக, தோல் வழியாக ஒளி உறிஞ்சுதலில் ஏற்படும் மாற்றங்களைக் கண்டறிதல் மற்றும் பாராசிம்பேடிக் நரம்பு மண்டல செயல்பாடுகள் கண்டறிதல் போன்ற முக்கியமான (India’s First AI Blood Test Launched) உடல் இரத்த அளவுகளை மதிப்பிடுகிறது. இந்த AI கருவியின் மதிப்பீடுகளை வைத்து மருத்துவ ஆய்வாளர்கள் டேப்லெட் கேமரா அல்லது ஸ்மார்ட்போனை பயன்படுத்தி உடனடியாக இரத்த பரிசோதனை மேற்கொள்ளலாம்.

India's First AI Blood Test Launched - Platform Tamil

குயிக் வைட்டல்ஸ் நிறுவனர் ஹரிஷ் பிசாம்

இந்த செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் குறித்து விளக்கிய குயிக் வைட்டல்ஸ் நிறுவனர் ஹரிஷ் பிசாம் அவர்கள் ‘இந்த AI செயலியின் மூலம் இரத்த பரிசோதனையானது நாம் செல்ஃபி எடுப்பது போல் எளிமையாகிவிட்டது. மேலும் இது சுகாதார துறையில், பின்தங்கிய சமூகங்களில் இருக்கும் இடைவெளிகளைக் பெரிய அளவில் குறைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்’ என தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் பேசிய அவர் பெரிய அளவில் மருத்துவ பரிசோதனை மற்றும் ஆய்வகங்கள் இல்லாத கிராமப்புற பகுதிகள் மற்றும் அரை நகர்ப்புற பகுதிகளில், சரியான நேரத்திற்குள் நோயை கண்டறிய இந்த AI கருவி உதவும் எனவும் தெரிவித்தார்.

Latest Slideshows

Leave a Reply