India's First National Space Day : இன்று இந்தியாவின் முதல் தேசிய விண்வெளி தினம் கொண்டாடப்படுகிறது

இந்தியா தனது முதல் தேசிய விண்வெளி தினத்தை இன்று (India’s First National Space Day) கொண்டாடி வருகிறது. இந்த தினம் எப்படி வந்தது என்ற வரலாற்றை பார்ப்போம்.

முதல் தேசிய விண்வெளி தினம் :

கடந்த 2023-ம் ஆண்டு ஜூலை மாதம் 14-ம் தேதி இஸ்ரோ Indian Space Research Organisation (ISRO) நிலவிற்கு சந்திரயான் 3 என்ற விண்கலத்தை அனுப்பியது. இந்த விண்கலம் தொடர்ந்து 40 நாட்கள் விண்வெளியில் பயணித்து சரியாக ஆகஸ்ட் 23 அன்று நிலவின் தென்துருவபகுதியில் விக்ரம் லேண்டர் பத்திரமாக தரையிறங்கி சாதனை படைத்தது. மேலும் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவிற்கு பிறகு 4-வது நாடு என்ற பெருமையும் பெற்றது. உலகில் இதுவரை எந்த ஒரு நாடும் நிலவின் தென் துருவத்தில் விண்கலனை தரையிறக்கியது இல்லை. ஆனால் இந்தியா தென்துருவத்தில் தரையிறக்கி சாதனை படைத்தது. இந்தியாவின் இந்த உலக சாதனையை கொண்டாடும் விதமாக பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் ஆகஸ்ட் 23 ஆம் தேதியை ‘தேசிய விண்வெளி தினமாக’ (National Space Day) அறிவித்தார்.

India's First National Space Day - முதல் தேசிய விண்வெளி தின கருப்பொருள் :

இந்தியாவின் விண்வெளிப் பயணங்களின் சாதனைகளை வெளிப்படுத்தவும் இளைஞர்களை ஊக்கப்படுத்தவும் இந்த முதல் தேசிய விண்வெளி தின கருப்பொருள் “நிலவைத் தொடும்போது உயிர்களைத் தொடுதல்”, இந்தியாவின் விண்வெளி சாகா விண்வெளி ஆய்வு மற்றும் தொழில்நுட்பத்தில்  குறிப்பிடத்தக்க தாக்கத்தை எடுத்துக்காட்டுகிறது.

பாரத் மண்டபத்தில் இரண்டு நாள் நிகழ்வு :

தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு புது டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் ஒரு பெரிய இரண்டு நாள் நிகழ்வு நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் பல உயர்மட்ட அமர்வுகள், இந்தியாவின் விண்வெளி சாதனைகள் தொடர்பான கண்காட்சிகள் நடைபெறுகிறது.

பாரதிய அந்தரிக்ஷ் ஹேக்கத்தான் :

  • தேசிய விண்வெளி தினம் 2024 (India’s First National Space Day) கொண்டாட்டங்களின் முக்கிய அம்சம் “பாரதீய அந்தரிக்ஷ் ஹேக்கத்தான்” ஆகும். இது விண்வெளி தொழில்நுட்பத்தில் புதுமையான யோசனைகள் மற்றும் தீர்வுகளைக் கண்டறியும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.
  • இந்தியா விண்வெளி ஆராய்ச்சி மற்றும் பல்வேறு ஆய்வுகளில் தொடர்ந்து முன்னேறி வரும் நிலையில் நாட்டின் விண்வெளிப் பயணங்களுக்கு அடுத்த தலைமுறை கண்டுபிடிப்பாளர்களை ஊக்குவிக்க முயல்கிறது. இஸ்ரோவால் நடத்தப்படும் தேசிய அளவிலான ஹேக்கத்தான் நிகழ்வு பல்வேறு சிக்கல் குறித்த அறிக்கைகளை மாணவர்களுக்கு வழங்குகிறது.

Latest Slideshows

This Post Has 2 Comments

  1. Divya

    I am truly thankful to the owner of this website who has shared this fantastic piece of writing at at this place.

Leave a Reply