India's First Reusable Hybrid Rocket Was Launched : இந்தியாவின் முதல் ரீயூசபிள் ஹைப்ரிட் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது

இந்தியாவின் முதல் ‘ரீயூசபிள் ஹைப்ரிட் ராக்கெட்’ (India’s First Reusable Hybrid Rocket Was Launched) இன்று விண்ணில் செலுத்தப்பட்டது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ரீயுசபிள் ஹைப்ரிட் ராக்கெட்டான ரூமி (RHUMI 1) 3 கியூப் செயற்கைகோள்களுடன் மாமல்லபுரம் அருகே உள்ள திருவிடந்தை கடற்கரையில் இருந்து இன்று காலை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

ஸ்பேஸ் ஸோன் ஸ்டார்ட் அப் நிறுவனம் :

தமிழகத்தை சேர்ந்த ஸ்பேஸ் ஸோன் ஸ்டார்ட் அப் நிறுவனம் இந்தியா மார்ட்டின் குழுமத்துடன் இணைந்து மறுபயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் ‘மிஷன் ரூமி 2024’ திட்டத்தின் கீழ் ரூமி (RHUMI 1) என்ற ராக்கெட்டை உருவாக்கியுள்ளது.

India's First Reusable Hybrid Rocket Was Launched :

சுமார் 3.50 மீட்டர் உயரம் கொண்ட இந்த ரூமி (RHUMI 1) ராக்கெட் வானில் 80 கி.மீ உயரத்தில் பறக்கக்கூடிய திறன் கொண்டது. மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட் என்பதால் பல முறை ஒரே ராக்கெட்டை பயன்படுத்தி செயற்கைக்கோளை ஏவலாம். இதனால் செயற்கைக்கோள் ஏவும் செலவு மிச்சமாகும் என்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். மொபைல் லாஞ்சரைப் பயன்படுத்தி நடமாடும் ஏவுதளம் மூலமாக இந்த ராக்கெட் இன்று விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்த ரூமி (RHUMI 1) ராக்கெட் 3 கியூப் செயற்கைக் கோள்கள் மற்றும் 50 பி.ஐ.சி.ஓ செயற்கைக் கோள்களை துணை சுற்றுப் பாதைக்கு கொண்டு சென்று நிலைநிறுத்தும் என ஸ்பேஸ் ஸோன் ஸ்டார்ட் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. மொத்தம் 60 – 80 கிலோ எடையிலான இந்த ரூமி (RHUMI 1) சோதனை ராக்கெட்டில், ‘நைட்ரஸ் ஆக்சைடு’ உள்ளிட்ட எரிபொருள்கள் நிரப்பப்பட்டுள்ளன. இந்த ராக்கெட்டில் செல்லும் 3 செயற்கைக்கோள்கள் புறஊதா கதிர் வீச்சு, காமா கதிர் வீச்சு, காற்றின் தரம், ராக்கெட் செல்லும்போது ஏற்படும் அதிர்வு உள்ளிட்ட தகவல்களை சேகரித்து தகவல்களை அனுப்பும்.

செயற்கைக்கோளை ஏவிய பிறகு மீண்டும் பூமிக்கு திரும்பும் வகையில் இந்த ரூமி (RHUMI 1) ராக்கெட் தயாரிக்கப்பட்டுள்ளது. ராக்கெட்டின் சில பாகங்கள் தவிர முக்கிய பாகம் பாராசூட் மூலம் மீண்டும் பூமிக்கு திரும்பும். அதனை எடுத்து சிறிய மாற்றங்கள் செய்து மீண்டும் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உலகளவில் இந்தியா விண்வெளி கண்டுபிடிப்புகளில் முன்னனி இடத்திற்கு வேகமாக வளர்ந்து வருகிறது. இதற்கு செலவு குறைந்த தீர்வுகளின் தேவை மிகவும் அவசியம். மீண்டும்  பயன்படுத்தக்கூடிய இந்த திட்டமானது சுற்றுச்சுழலுக்கு மிகவும் நல்லது. மேலும் விண்வெளி துறையில் புதிய புரட்சிக்கான தொடக்கமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Slideshows

Leave a Reply