India's First Space Tourist : கோபிசந்த் தொட்டகுரா இந்தியாவின் முதல் விண்வெளி சுற்றுலாப் பயணி

இந்தியாவைச் சேர்ந்த விமானி கோபிசந்த் தொட்டகுரா (India’s First Space Tourist) N.S – 25  ஆறு பேர் குழுவில் இடம்பிடித்து உள்ளார். விண்வெளியிலும் வெவ்வெறு உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியங்கள் உள்ளனவா என ஆராய விண்வெளிக்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாவாசிகளை அழைத்துச் செல்லும் திட்டத்தினை அமேசான் ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தின் நிறுவனரான ஜெஃப் பெசோஸ் செயல்படுத்தி வருகிறார்.

இந்த புதிய திட்டம் N.S – 25 என்ற பெயரில்  அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த முறை  இந்த புதிய N.S – 25 என்ற திட்டத்தின் மூலம் இந்தியாவைச் சேர்ந்த தொழில்முனைவோரும் விமானியுமான கோபிசந்த் தொட்டகுரா என்பவர் பயணிக்க இருக்கிறார். முன்னாள் விமானப்படை கேப்டன் எட் டுவைட், மேசன் ஏஞ்சல், சில்வைன் சிரோன், கென்னத் எல்.ஹெஸ், மற்றும் கரோல் ஷாலர் ஆகியோருடன் கோபிசந்த் தொட்டகுரா பயணிக்க இருக்கிறார். விண்வெளி நிறுவனம் இந்த விண்வெளி  பயணத்திற்கான பயண தேதி ஆனது பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

ராகேஷ் சர்மா 1984-ஆம் ஆண்டில் முதன்முறையாக விண்வெளிக்குச் சென்றார். இவர் இந்தியாவின் ராணுவ விங் கமாண்டராக செயல்பட்டவர். ராகேஷ் சர்மாவிற்கு அடுத்தபடியாக விண்வெளி பயணம் மேற்கொள்ளும் 2-வது இந்தியர் என்ற பெருமையை கோபிசந்த் தொட்டகுரா பெற உள்ளார்.

கோபிசந்த் தொட்டகுரா - ஓர் குறிப்பு (India's First Space Tourist)

கோபிசந்த் தொட்டகுரா ஆந்திராவின் விஜயவாடாவில் பிறந்தவர் மற்றும் ஏரோநாட்டிகல் பல்கலையில் பட்டப்படிப்பை முடித்தவர். இவர் ஹார்ட்ஸ்பீல்டு-ஜாக்சன் அட்லாண்டா சர்வதேச விமான நிலையம் அருகே அமைந்துள்ள உடல்நல மற்றும் சுகாதாரம் சார்ந்த பிரிசர்வ் லைஃப் கார்ப்பரேசன் என்ற சர்வதேச மையத்தின் துணை நிறுவனராக உள்ளார்.

இவர் ஜெட் விமானங்ள் மட்டுமின்றி,  கிளைடர் வகை விமானங்கள், சீபிளேன் எனப்படும் நீரிலும், வானிலும் செல்ல கூடிய விமானங்கள், உள்ளிட்ட பல்வேறு வகையான விமானங்கள், ஏர் பலூன்கள் உள்ளிட்டவற்றிலும் விமானியாக சிறப்பாகச் செயல்பட்டு இருக்கிறார். சர்வதேச மருத்துவ ஜெட் விமானியாக கோபிசந்த் தொட்டகுரா பணியாற்றி இருக்கிறார். தான்சானியாவில் உள்ள மவுண்ட் கிளிமாஞ்சாரோவுக்கு சென்றது கோபிசந்த் தொட்டகுராவின் சமீபத்திய சாதனையாக உள்ளது.

கோபிசந்த் தொட்டகுரா, “இந்த பயணம் ஆனது விண்வெளிக்கு அப்பால் உள்ள விசயங்களை அறிந்துகொள்வதற்காக மேற்கொள்ளப்படுகிறது. விண்வெளியில் வெவ்வெறு உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியங்கள் உள்ளனவா என ஆராய அனைத்து முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன. இந்த விண்வெளிப் பயணம் அதற்காகவே மேற்கொள்ளப் படுகிறது” என இதுகுறித்து  கருத்து தெரிவித்துள்ளார்.

Latest Slideshows

Leave a Reply