India's New Criminal Law : ஜூலை 1 முதல் புதிய குற்றவியல் சட்டம் அமலுக்கு வந்துள்ளது

பாரதிய நியாய சன்ஹிதா 2023, பாரதிய நாகரிக் சுரக் ஷா 2023 மற்றும் பாரதிய சாக் ஷியா 2023 ஆகிய 3 சட்டங்கள் (India’s New Criminal Law) புதிதாக கொண்டு வரப்பட்டுள்ளன. ஜூலை 1 முதல் புதிய இந்த 3 குற்றவியல் சட்டங்கள் ஆனது இந்தியா முழுவதும் அமலுக்கு வந்துள்ளன. இந்த புதிய 3 குற்றவியல் சட்டங்கள் முறையே இந்திய குற்றவியல் சட்டம் (IPC), இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் (CRPC) மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் (IEC) ஆகிய சட்டங்களுக்கு மாற்றாக கொண்டு வரப்பட்டுள்ளன. இந்தச் சட்டத்திருத்தத்தின் நோக்கமானது ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அவர்களது ஆதிக்கத்துக்கு ஏற்றார்போல் இயற்றப்பட்ட சட்டங்களைத் திருத்தம் செய்து எல்லோருக்கும் நீதி பரிபாலனம் செய்யும் சட்டங்களாக மாற்றுவதே ஆகும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

India's New Criminal Law - புதிய குற்றவியல் சட்டத்தின் சிறப்பம்சங்கள் :

1. பாரதிய நியாய சன்ஹிதா 2023 :

  • பாரதிய நியாய சன்ஹிதா 2023 ஆனது இந்திய தண்டனைச் சட்டம் 1860-க்கு மாற்றான புதிய சட்டம் ஆகும். இந்த புதிய சட்டத்தில் தேச துரோகம் என்பது நீக்கப்பட்டுள்ளது.
  • அதற்கு மாற்றாக பிரிவினைவாதம், கிளர்ச்சி, நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு எதிராக தண்டனை வழங்கும் புதிய பிரிவு ஆனது சேர்க்கப்பட்டுள்ளது.
  • மேலும் இந்த புதிய சட்டத்தில் சிறுவர்களை கும்பலாக அடித்து கொலை செய்வதற்கு மரண தண்டனை வழங்கப்படும் என்றும் அதைப்போலவே சிறுவர்களை கூட்டு வன்கொடுமைக்கு உள்ளாக்குவதற்கும் தண்டனை வழங்கப்படும் எனவும் கொண்டுவரப்பட்டுள்ளது. 

2. பாரதிய நாகரிக் சுரக்‌ஷா 2023 :

  • பாரதிய நாகரிக் சுரக்‌ஷா 2023 ஆனது இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்துக்கு மாற்றான புதிய சட்டம் ஆகும்.
  • இந்த புதிய சட்டத்தில் கால வரையறைக்குள் விசாரணை மற்றும் வாதங்கள் நடத்தப்பட வேண்டும். விசாரணை முடிந்த 30 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்க வேண்டும் என கொண்டுவரப்பட்டுள்ளது. 
  • மேலும் இந்த புதிய சட்டத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்களின் வாக்குமூலத்தை வீடியோவாக கட்டாயமாக  பதிவு செய்யப்பட வேண்டும் என கொண்டுவரப்பட்டுள்ளது. 
  • இந்தக்  குற்றத்தின் வருமானம் மற்றும் சொத்துக்களை இணைக்கும் புதிய வழிமுறை இணைக்கப்பட்டுள்ளது.

3. பாரதிய சாக்ஷியா 2023 :

  • பாரதிய சாக்ஷியா 2023 ஆனது இந்திய சாட்சிகள் சட்டம் 1972-க்கு மாற்றான புதிய சட்டம் ஆகும். 
  • இந்த புதிய சட்டத்தின்படி, நீதிமன்றங்களில் சமர்ப்பிக்கப்படும் அல்லது ஏற்றுக்கொள்ளப்படும் சாட்சிகளில் எல்லாம் மின்னணு அல்லது டிஜிட்டல் ஆவணங்கள், மின்னஞ்சல்கள், சர்வர் பதிவுகள், கணினி, மடிக்கணினி, குறுஞ்செய்திகள், இணையதளங்கள், சம்பவம் நடந்த இடத்தின் சான்றுகள், அஞ்சல்கள், சாதனங்களில் உள்ள செய்திகள் ஆகியவை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என கொண்டுவரப்பட்டுள்ளது.
  • இந்த புதிய சட்டத்தின்படி, வழக்கு ஆவணம், முதல் தகவல் அறிக்கை, குற்றப்பத்திரிக்கை மற்றும் தீர்ப்புகள் டிஜிட்டல் மயாக்கப்பட வேண்டும்.
  • மேலும் இந்த புதிய சட்டத்தின்படி, காகித ஆவணங்களைப் போலவே டிஜிட்டல் மற்றும் மின்னணு ஆவணங்களும் சட்ட அங்கீகாரம், மதிப்பு ஆனது அமலாக்கத்தன்மை பெறும்.

Latest Slideshows

Leave a Reply