இன்பினிக்ஸ் நிறுவனம் Infinix Note 40X 5G போனை அறிமுகம் செய்ய உள்ளது

இந்தியாவில் இன்பினிக்ஸ் நோட் 40 5ஜி (Infinix Note 40 5G) ஸ்மார்ட்போன் சில வாரங்களுக்கு முன்பு தான் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு புதிய போனை அறிமுகம் செய்ய உள்ளது இன்பினிக்ஸ் நிறுவனம். அதாவது Infinix Note 40X 5G எனும் ஸ்மார்ட்போனை தான் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த Infinix Note 40X போனின் சிறப்பம்சம் மற்றும் புகைப்படங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது.

இன்பினிக்ஸ் நோட் 40எக்ஸ் 5ஜி சிறப்பம்சங்கள் (Infinix Note 40X 5G Specifications) :

  1. Infinix Note 40X 5G Display : இந்த இன்பினிக்ஸ் நோட் 40எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் 6.78-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் அறிமுகம் செய்யப்படுகிறது. மேலும் இந்த போனின் டிஸ்பிளேவானது 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது. பெரிய டிஸ்பிளே வடிவமைப்புடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும் என இன்பினிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த Infinix Note 40X 5G போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். மேலும் ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் இந்த புதிய போன் அறிமுகமாகிறது. ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த இன்பினிக்ஸ் நோட் 40எக்ஸ் 5ஜி போனுக்கு கிடைக்கும்.

  2. Infinix Note 40X 5G Camera : இந்த இன்பினிக்ஸ் நோட் 40எக்ஸ் 5ஜி போனில் 108MB பிரைமரி கேமரா + 2MB டெப்த் சென்சார் + 2MB மைக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும் இதுமட்டுமல்லாமல் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் தனியே 8MB கேமரா இந்த போனில் வழங்கப்பட்டுள்ளது.

  3. Infinix Note 40X 5G Storage : 8GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த இன்பினிக்ஸ் நோட் 40எக்ஸ் 5ஜி போன் விற்பனைக்கு வருகிறது. கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவும் இந்த போனில் கொடுக்கப்பட்டுள்ளது. மெமரி கார்டை பயன்படுத்துவதற்கு ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த இன்பினிக்ஸ் போனில் உள்ளது.

  4. Infinix Note 40X 5G Battery : 5000mAh பேட்டரி வசதியுடன் இன்பினிக்ஸ் நோட் 40எக்ஸ் 5ஜி போன் விற்பனைக்கு வருகிறது. இந்த நோட் 40எக்ஸ் 5ஜி போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் இந்த பேட்டரியை விரைவாக சார்ஜ் செய்வதற்கு 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

  5. Infinix Note 40X 5G Rate : ஆன்லைனில் கசிந்த தகவலின்படி இந்த புதிய இன்பினிக்ஸ் நோட் 40எக்ஸ் 5ஜி போன் ரூ.11,000 அல்லது ரூ.13,000 என்ற குறைந்த பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply