​Infinix Zero 30 5G : இந்தியாவில் முதன்முறையாக 4K சப்போர்ட் கொண்ட 50MB செல்பி கேமரா

​Infinix Zero 30 5G : இந்தியாவில் பல்வேறு சிறப்பம்சங்களுடன் புதியவகை மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதில் இன்பினிக்ஸ் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. அதுவும் குறிப்பாக பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களை முன்நிறுத்தியே இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் உள்ளன. அந்த வரிசையில் இப்போது வரை எந்த நிறுவனமும் அளிக்க முடியாத பல அம்சங்களுடன் புதிய ஸ்மார்ட்போனான இன்பினிக்ஸ் ‘ஜீரோ 30 5ஜி’ என்ற போனை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது.

​Infinix Zero 30 5G சிறப்பம்சங்கள் :

1. கேமரா (Camera)

​Infinix Zero 30 5G கேமரா பொறுத்தவரையில், 108MB மெயின் கேமரா வசதியுடனும், 13MB அல்ட்ரா வைல்டு லென்ஸ், 2MB மேக்ரா கேமரா என மூன்று விதமான கேமரா வசதிகளை கொண்டுள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்கு அதன் முன்பக்கத்தில் மட்டும் 50MB மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டுள்ளது. இது தவிர நம் இந்தியாவில் முதன்முறையாக 4K சப்போர்ட் கொண்ட 50MB செல்பி கேமரா இதுவாகும். மேலும் இதில் பிக்சல் ஜூமிங்க் டெக்னாலஜி, டூயல் வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட், பிலீம் மோட் உள்ளிட்ட சிறப்பம்சங்களும் கொடுக்கப்பட்டுள்ளது என்று இன்பினிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

2. ஸ்டோரேஜ் (Storage)

இன்பினிக்ஸ் ஜீரோ 30 ஸ்மார்ட்போன் ஆனது 8GB /16GB ரேம் மற்றும் 256 GB ஸ்டோரேஜ் ஆதரவுடன் வெளிவரும் என்று இன்பினிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் நமக்கு கூடுதலாக மெமரி நீட்டிப்பு வேண்டுமென்றால் அதற்கான ஆதரவும் கொடுக்கப்பட்டுள்ளதாம். இந்த போனில் நீங்கள் கூடுதலாக மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவும் இதில் உள்ளது. அதோடு 9GB விர்ச்சுவல் ரேம் சப்போர்ட் இருக்கிறது. ஆகவே, மொத்தமாக 21 ஜிபி ரேம் வருகிறது.

3. டிஸ்பிலே (Display)

இந்த வகை ஸ்மார்ட்போனில், பிரீமியம் 3D கர்வ்ட் டிசைன் கொண்ட ‘6.78’ இன்ச் Full HD+ அமோலெட் டிஸ்பிளே (Display) கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போனுக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 கூடுதல் பாதுகாப்பாக வருகிறது. ஆண்ட்ராய்டு 13 OS கொண்ட மீடியாடெக் டைமன்சிட்டி 1100 எஸ்ஓசி சிப்செட்டுடனும் வருகிறது.

4. ​Infinix Zero 30 5G நிறங்கள் (Colours)

விற்பனைக்கு வரவிருக்கும் (Infinix Zero 30 5G) இன் பின் பேனல் வடிவமைப்பு மற்றும் வண்ண விருப்பங்களையும் நிறுவனம் வெளிப்படுத்தியது. இந்த நிறுவனம் பகிர்ந்துள்ள படங்களில், கோல்டன் கலர், மற்றும் லாவெண்டர் ஆப்ஷன்களில் கண்ணாடி பின் பேனல்களுடன் இந்த போன் காணப்படுகிறது. இந்த வகை மாடல் லெதர் ஃபினிஷ் வகைகளைக் கொண்டிருப்பதாகவும் கிண்டல் செய்யப்படுகிறது.

5. பேட்டரி சிறப்பம்சம் (Battery)

​Infinix Zero 30 5G ஸ்மார்ட்போன் 68 வாட்ஸ் சூப்பர் சார்ஜ் (Super Charge) சப்போர்ட் கொண்ட 5,000mAh பேட்டரி உள்ளது. இதன் முலம் வெறும் 30 நிமிடங்களில் 80% சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும் என நிறுவனம் கூறுகிறது. எனவே இந்த ஸ்மார்ட்போன் வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது எனவும் இந்நிறுவனம் கூறுகிறது.

6. இன்பினிக்ஸ் 'ஜீரோ 30 5ஜி' விலை (Rate)

‘ஜீரோ 30 5ஜி’ விலையை பொறுத்தவரையில், ரூ.35,000 வரை நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 5G சப்போர்ட்டுன் வரும் இந்த போன் இந்தியாவில் தற்போது, ரூ.25 ,000 விற்பனை செய்யப்படும் என இன்பினிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

Latest Slideshows

Leave a Reply