Inflation Under Control In Tamil Nadu : தமிழகத்தில் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது

பணவீக்கம் (Inflation) :

பணவீக்கம் (Inflation) என்பது  நாணயத்தின் மதிப்பிறக்கத்தை குறிக்கும். அந்த பணவீக்கம் (Inflation) மூலம் சந்தையிலுள்ள பொருட்களின் பொதுவான விலை உயர்வு ஏற்பட்டு அந்த நாட்டு நாணயத்தின் பொருட்களை வாங்கும் திறன் (அல்லது சந்தை மதிப்பு) உள்நாட்டுச் சந்தையில் குறைந்து போவதை குறிக்கும். பணத்தின் வாங்கும் திறனின் வீழ்ச்சி என்றும் கூறலாம். அதாவது அதிக தேவை குறைந்த அளிப்பு எனும் நிலைப்பாடு காரணமாக பணத்தின் பெறுமதி வெகுவாக குறைவடைவது என்பதை இது குறிக்கிறது. மேலும் விலைவாசியானது தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்வதையும் பணவீக்கம் என்று கூறலாம். தேவை விதியின்படி விலை உயர்ந்தால் தேவை ஆனது குறையும்.  ஆனால் பணவீக்க காலத்தில் இதற்கு எதிர்மறையாக பொருட்களின் விலை ஆனது உயர்கிறது.

பணவீக்க காலத்தில் அடிப்படையான பொருட்களின் விலை உயர்வால் தேவையும் உயர்கிறது. அதன் காரணம் சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவினரிடம் பணம் அதிகமாக சேர்வதால் அவர்களின் தேவை (Demand) அளிப்பைவிட (Supply) அதிகரிக்கிறது. ஒரு  குறுகிய காலத்தில் அளிப்பை (Supply) அதிகரிக்க முடியாத காரணத்தால் விலை ஆனது உயருகிறது. பொதுவாக மத்திய வங்கிகள் வட்டி வீதங்கள், திறந்த நிலைச் சந்தை செயல்பாடுகள் மற்றும் வங்கியியல் ரீதியான தேவையான ஒதுக்கீடுகளை அமைத்தல் ஆகிய வழிகளின் மூலம் மொத்தப் பண அளவைக் கட்டுப்படுத்துகின்றன.

Inflation Under Control In Tamil Nadu :

தமிழக நிதித்துறை செயலாளர் உதயசந்திரன் பட்ஜெட் குறித்து விளக்கம் அளிக்கையில், தமிழகத்தில் பொருளாதாரம் ஆரோக்கியமாக உள்ளது என்றும் பணவீக்கம் ஆனது தேசிய சராசரியை விட குறைவாக (Inflation Under Control In Tamil Nadu) உள்ளது. இதனால் தமிழகத்தில் பணவீக்கம் ஆனது கட்டுக்குள் உள்ளது. தமிழகத்தின் வருவாய் ஆனது இயற்கை பேரிடர்களால் குறைந்துள்ளது. தமிழகத்தில் அதிக நிதி ஆனது நிவாரணத் தொகைக்காகவே செலவிடப்பட்டுள்ளது. கடந்த 2023-ஆம் ஆண்டு பத்திரப்பதிவுத்துறை வருமானம் ஆனது எதிர்பார்த்த அளவு இல்லை. மத்திய அரசிடமிருந்து பெறப்படும் நிதி பகிர்வு, மற்றும் மானியம் ஆனது குறைந்து கொண்டே வருகிறது.

Inflation Under Control In Tamil Nadu : 10வது நிதிக்குழுவின் போது 6.64% சதவீதமாக இருந்த நிதிபகிர்வு ஆனது 15வது நிதிக்குழுவில் 4.08% சதவீதமாக குறைந்து உள்ளது. தமிழக அரசானது வரி திரட்டுவதற்கான முயற்சிகளை கவனமாக கையாண்டு வருகிறது. தமிழகத்தில் மோட்டார் வாகனம் மூலம் கிடைக்கும் வரி வருவாய் ஆனது திருப்திகரமாக உள்ளது. இந்த 2024-ஆம் ஆண்டு 15% வணிக வரியில் வளர்ச்சி ஆனது இருக்கும் என தமிழக அரசானது எதிர்பார்க்கிறது. தமிழக இளைஞர்களின் பங்களிப்பு ஆனது மத்திய அரசு அலுவலகங்களில் குறைந்து கொண்டே வருகிறது. இதற்கான போட்டி தேர்வு பயிற்சிக்காக ரூ.6 கோடி ஆனது ஒதுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

Latest Slideshows

Leave a Reply