மார்ச் 7, 2024-ல் “Innovate Tamilnadu” - ஸ்டார்ட் அப்' பிரிவு சார்பில் நடைபெற உள்ளது

‘Start up’ நிறுவனங்களின் வளர்ச்சிக்காக தமிழகத்தில் பல்வேறு திட்டங்கள் ஆனது செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழக மாநில அளவிலான புதிய தொழில் முனைவோருக்கான நிகழ்ச்சி “Innovate Tamilnadu” வரும் மார்ச் 7, 2024-ல் ஸ்ரீவில்லிபுத்தூர் கலசிலிங்கம் பல்கலையில் நடைபெற உள்ளது. புதிய ‘Start up’ நிறுவனங்களுக்கு தங்களது படைப்புகளை வெளிக்கொணர சிறப்பான தளமாக இந்த “இன்னோவேட் தமிழ்நாடு” நிகழ்ச்சி ஆனது அமையும்.

'Start up' நிறுவனங்கள் - ஒரு குறிப்பு :

‘Start up’ நிறுவனங்கள் என்பது “சந்தைக்குப் புதிதாக தயாரிப்புகளைக் கொண்டுவருகின்ற நிறுவனங்கள் மற்றும் சந்தையில் ஏற்கெனவே இருக்கும் தயாரிப்புகளை முற்றிலும் புதிய வடிவில் கொண்டு வருகின்ற நிறுவனங்கள், மற்றும் புதிய சேவைகளை வழங்கும் நிறுவனங்களும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள்” ஆகும். இவற்றின் தனித்தன்மை ஆனது புத்தாக்கச் சிந்தனைகள் ஆகும்.

“Innovate Tamilnadu” - ஒரு குறிப்பு :

இந்தியாவில், ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் வளர்ச்சிக்கான வலுவான சூழலை உருவாக்க பாஜக ஸ்டார்ட் – அப் பிரிவில் இந்த “Innovate Tamilnadu” மார்ச் 7, 2024-ல் ஸ்ரீவில்லிபுத்தூர் கலசிலிங்கம் பல்கலையில் நடைபெற உள்ளது. இந்த “Innovate Tamilnadu” நிகழ்ச்சியின் நோக்கம் ஆனது தொழில்நுட்பத்தின் மூலம்,

  • சமூக தீமைகளை ஒழிக்க
  • தீர்வுகளை உருவாக்க மற்றும் அவற்றை செயல்படுத்தக்கூடிய

ஆர்வமும் ஆற்றலும் மிக்க தொழில்முனைவோர்களைக் கண்டறிந்து அந்நிறுவனங்களுக்குத் தேவையான வளங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்த வழிவகுப்பதே ஆகும். இந்த “இன்னோவேட் தமிழ்நாடு” நிகழ்ச்சியில் ‘Start up’ நிறுவனங்களின் முக்கிய முதலீட்டாளர்கள் கலந்து கொள்கின்றனர். மொத்தமாக 15,000க்கும் மேற்பட்ட மாணவர்கள், 100க்கும் மேலான இளம் தொழில் முனைவோர் மற்றும் நிறுவனங்கள் இந்த “இன்னோவேட் தமிழ்நாடு” நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்கப்படுகிறது. சிறப்பாக தங்களது படைப்புகளை இந்த “Innovate Tamilnadu” நிகழ்ச்சியில் முன்வைக்கும் பங்கேற்பாளர்களுக்கு,

  • முதலீடு ஈட்டும் வாய்ப்புகள்
  • தொழில்நுட்பம்
  • சந்தைப்படுத்தலுக்கான வழிகாட்டுதல்கள் மற்றும் பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட உள்ளன

மாணவர்கள் மற்றும் தொழில் முனைவோரை ஈர்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த “Innovate Tamilnadu” நிகழ்ச்சிக்கு அனுமதி கட்டணம் எதுவும் இல்லை. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இந்த நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றுவார். புதிய ‘Start up’  நிறுவனங்களுக்கு தங்களது படைப்புகளை வெளிக்கொணர சிறப்பான தளமாக இந்த “Innovate Tamilnadu” நிகழ்ச்சி ஆனது அமையும். இந்த “Innovate Tamilnadu” நிகழ்ச்சியில் பதிவு செய்ய விரும்பும் மாணவர்கள் மற்றும் தொழில் முனைவோர் www.tnbjpstartup.org/events/ இணையத்தளத்தில் பதிவு செய்யலாம். தமிழ்நாட்டில் புதிய நிறுவனங்களைத் தொடங்க விரும்புபவர்களுக்கு இந்த “Innovate Tamilnadu” நிகழ்ச்சி ஆனது பெரும் ஊக்கம் தரும் என்னும் நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.

Latest Slideshows

Leave a Reply