Instagram Influencer Orry ஒரு செல்ஃபிக்கு ரூ.25 லட்சம் பெறுகிறார்

ஒரு புதிய பாதையை செதுக்குதல் :

பாலிவுட் நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அரசியல்வாதிகள் இல்லாமல் இந்தியாவில் ஒரு புதிய பாதையை செதுக்கி வழக்கமான புகழ் பந்தயத்தில் இருந்து வேறுபடுகிறார் ஓர்ரி. மும்பையில் தொழிலதிபர் சூரஜ் கே அவத்ரமணி மற்றும் ஷானாஸ் அவத்ரமணி ஆகியோரின் மகனாக ஆகஸ்ட் 2 அன்று பிறந்தவர் ஓர்ரி. மது, ஹோட்டல் மற்றும் ரியல் எஸ்டேட் வணிகத்தில் ஈடுபட்டுள்ள அவத்ரமணிஸ்ன் பணக்கார குடும்பத்தை சேர்ந்த ஓர்ரி பல பாலிவுட் பிரபலங்கள் மற்றும் சக்திவாய்ந்த ஆளுமைகளின் குழந்தைகளுடன் அமெரிக்காவில் படித்தவர்.

Instagram Influencer Orry :

இன்ஸ்டாகிராமில் தனது வெளிநாட்டுச் சுற்றுலா, பார்ட்டி, விதவிதமான காஸ்ட்யூம்கள், விலை உயர்ந்த அணிகலன்களுடன் தொடர்ந்து போட்டோக்களைப் பதிவிட்டு திடீரென இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலமானவர் ஓர்ரி (Instagram Influencer Orry). இவரது சமீபத்திய தீபகா படுகோன், ஜான்வி கபூர், நீடா அம்பானி, சல்மான் கான் என பாலிவுட் முன்னணி நடிகர்கள் பலருடன் எடுத்திருந்த செல்ஃபிகள் சமூக வலைதளங்களில் சமீப நாட்களாக  வைரலாகி  உள்ளது. இதுதவிர பாடகர், ஸ்டைலிஸ்ட், ஃபேஷன் டிசைனர் என பல்வேறு துறைகளில் ஓர்ரி கவனம் செலுத்தி வருகிறார். இவரது உணவைப் பார்த்துக் கொள்ள மேனேஜர், ஆடைகளை பராமரிக்க மேனேஜர், டேட்களைப் பார்த்துக் கொள்ள மேனேஜர், பயணங்கள், கணக்கு வழக்குகளைப் பார்த்து கொள்ள மேனேஜர் என ஐந்து மேனஜரை வைத்துள்ளார். ஓர்ரி ஒரு பாடகர், ஃபேஷன் டிசைனர். ஒரு நிகழ்ச்சிக்கு ஓர்ரி போனால் ரூ.25-30 லட்சம் வரை கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள்.

ஓர்ரி, ஒரு செல்ஃபி எடுக்க 25 லட்சம் ரூபாய் கட்டணமாக வசூலிப்பதாக செய்திகள் பரவி உள்ளது :

தன்னைப் பற்றிய இந்த தகவல்கள் குறித்து ஓர்ரி, “நான் ஒரு செல்ஃபிக்கு ரூ.25 லட்சம் வரை வாங்குவதாக குமுறுகிறார்கள். நானாக ஒருவருடன் போட்டோ எடுக்க விரும்பினால் பணம் வாங்குவதில்லை. ஆமாம், என்னுடன் போட்டோ எடுத்துக்கொள்ள ஒருவர் ஆசைப்பட்டால் நிச்சயம் அதற்கு 25 லட்சம் ரூபாய் வாங்குகிறேன். இது பாலிவுட் வட்டாரத்தில் பெரும்   பேசுபொருளாக உள்ளது”.

Latest Slideshows

Leave a Reply