Intelligent Transport Systems In MTC Buses : சென்னை பெருநகரப் போக்குவரத்துக் கழகம் (MTC) ITS ஆக மாறுகிறது

Intelligent Transport Systems In MTC Buses - சென்னை MTC ஆனது டிஜிட்டலாக மாறுகிறது (புதிய புரட்சி) :

பெருநகரப் போக்குவரத்துக் கழகம் (MTC) மொத்தமும் டிஜிட்டலாக அதாவது Intelligent Transport Systems ஆக மாற்ற (Intelligent Transport Systems In MTC Buses) உள்ளது. மாநகரப் பேருந்து அமைப்பை நுண்ணறிவு போக்குவரத்து அமைப்பாக மாற உள்ளது. பொதுப் போக்குவரத்து முறையை மொத்தமாக இதன் மூலம் சென்னை நகரம் மாற்றியமைக்க உள்ளது. இந்த Intelligent Transport Systems திட்டத்திற்கு ஜப்பான் சர்வதேச கூட்டுறவு நிறுவனம் (JICA) மற்றும் தமிழ்நாடு அரசு இணைந்து நிதியளிக்க உள்ளது.

  • இதற்காக தானியங்கி வாகன இருப்பிட அமைப்பு (AVLS) கொண்டு வரப்படும்.
  • பேருந்துகளில் GPS உடன் ஒற்றைக் கட்டுப்பாட்டு அலகு (SCU) அமைக்கப்படும்.
  • தொடுதிரை கொண்டால் சிஸ்டம் (Touchscreen System) பஸ் டிரைவர் கன்சோல் (BDC – Bus Driver Console) பகுதியில் வைக்கப்படும்.
  • இனி பேருந்துகள் இதன் மூலம் GPS உடன் இயங்கும்.
  • 71 டெர்மினல்கள் மற்றும் 500 பேருந்து நிறுத்தங்கள் ஆனது நிறுவப்படும்.

பயணிகள் தகவல் அமைப்பு (PIS – Passenger Information System) காட்சிப் பலகைகள், பயணிகள் மொபைல் பயன்பாடு மற்றும் இணையதளம் மூலம் நிகழ்நேர வாகனத் தகவல்கள் மற்றும் டிப்போ மேனேஜ்மென்ட் சிஸ்டம் (DMS – Depo Management System) என்று பல புதிய வசதிகள் ஆனது ஏற்படுத்தப்படும்

தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் முறை ஆனது கொண்டு வரப்பட உள்ளது :

மார்ச் முதல் வாரத்தில் மாநகரப் போக்குவரத்துக் கழகம் (MTC) தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் முறையை அறிமுகப்படுத்தவுள்ளது. MTC நிர்வாக இயக்குநர் ஆல்பி ஜான் இதை உறுதிப்படுத்தி உள்ளார். அதன்படி விரைவில் பயணிகளுக்கு பயணிகள் தகவல் அமைப்பும் (PIS) மற்றும் தானியங்கி டிக்கெட் அமைப்பும் வழங்கப்படும். சென்னையில் உள்ள அனைத்து பேருந்துகளிலும் வரும் 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் இந்த பயணிகள் தகவல் அமைப்பு ஆனது வழங்கப்படும். அதாவது தானியங்கி மூலம் பேருந்துகளில் எந்த நிறுத்தம் என்ற அறிவிப்பு ஆனது வெளியிடப்படும். அடுத்து வரும் நாட்களில் இந்த திட்டம் ஆனது மற்ற நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். இது போக 1,500 மின்சார பேருந்துகளை உலக வங்கி மற்றும் ஜெர்மன் வங்கியான KfW ஆகியவற்றின் நிதியுதவியுடன் வாங்க திட்டமிட்டுள்ளதாகவும் மாநகராட்சி நிர்வாக இயக்குனர் கூறுகிறார்.

சென்னை மாநகர மதிப்பீட்டின்படி, சென்னை மாநகரப் போக்குவரத்து அமைப்புக்கு தற்போது மொத்தம் 5,000 பேருந்துகள் தேவைப்படுவதால் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் செயல்முறை ஆனது தொடங்கப்பட்டுள்ளதாகவும் MTC நிர்வாகம் தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் மாநகர பேருந்து கார்டுகள் ஆனது வழங்கப்படும். மாநகர பேருந்து கார்டுகளை இதில் டேப் செய்தும் நாம் டிக்கெட் எடுக்கலாம். நாம் செல்லும் தூரத்திற்கு ஏற்றபடி டிக்கெட் ஆனது வழங்கப்படும். இப்படி டேப் செய்யும் முறை ஆனது ஏற்கனவே வெளிநாடுகளில்  அமலில் உள்ளது. சென்னையிலும் அதே முறை ஆனது கொண்டு வரப்பட உள்ளது.

பேருந்து, மெட்ரோ, மின்சார ரயில் அனைத்துக்கும் ஒரே பயணச்சீட்டை பயன்படுத்தும் முறை :

பேருந்து, மெட்ரோ, மின்சார ரயில் உள்ளிட்ட மூன்றிற்கும் ஒரே பயணச்சீட்டை பயன்படுத்தும் முறையை கொண்டு வர தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. சென்னையில் மக்கள் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல மாநகர பஸ், மெட்ரோ ரயில், புறநகர் மின்சார ரயில் உள்ளிட்ட மூன்று ஆப்ஷன்களை பயன்படுத்துகின்றனர். மக்கள் இந்த மூன்று ஆப்ஷன்களுக்கும் தனித் தனியாக டிக்கெட் எடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் இவை அனைத்துக்கும் ஒரே பயணச்சீட்டை பயன்படுத்தி இந்த மூன்றிலும் பயணிக்கும் முறையை கொண்டு வர தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அதாவது ஒரே டிக்கெட்டை பயன்படுத்தி இந்த மூன்றிலும் பயணிக்க முடியும். விரைவில் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.

ஒரு கார்ட் அல்லது பாஸ் போன்ற அட்டை ஆனது இதற்காக வழங்கப்படும். மெட்ரோ நிலையத்தில் இந்த கார்டை ஸ்கேன் செய்து அதில் பயணிக்க முடியும். மின்சார ரயில்களில் இந்த கார்டை ஸ்கேன் செய்து கொள்ள முடியும். இந்த கார்டை பேருந்துகளிலும் நடத்துனர்களிடம் உள்ள  ஸ்கேன் செய்யும் கருவிகள் மூலம் ஸ்கேன் செய்து பயன்படுத்திக்கொள்ள முடியும். எனவே பயணிகள் இந்த ஒரு கார்டை ரீ சார்ஜ் செய்து அதன் மூலம் மூன்று சேவைகளையும் பயன்படுத்திக்கொள்ள முடியும். இதன் மூலம் பயணிகள் கவுண்ட்டர்களின் நிற்க வேண்டிய அவசியம் இருக்காது. மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள், மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள், புறநகர் ரயில்வே அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோரிடம் இந்த திட்ட அறிக்கை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை செய்து உள்ளார்.

Latest Slideshows

Leave a Reply