Interest Rate Cut Action Of US : பெடரல் ரிசர்வ் வங்கி அமெரிக்காவின் 0.5 சதவிகிதம் வட்டி விகித குறைப்பை தெரிவித்துள்ளது

Interest Rate Cut Action Of US - அமெரிக்க பெடரல் வங்கி வட்டியை குறைக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது :

தற்போது அமெரிக்க சந்தை ஆனது Discounting The Future என்ற நிலையில் உள்ளது. 4 ஆண்டுகளுக்கு பிறகு (அதாவது கொரோனா பெருந்தொற்று ஏற்பட்ட 2020ம் ஆண்டுக்கு பிறகு) தற்போது அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் வங்கி ஆனது வட்டி விகிதத்தை (Interest Rate Cut Action Of US) குறைத்துள்ளது. அதாவது பெடரல் ரிசர்வ் வங்கி ஆனது செப்டம்பர் 18ம் தேதி அன்று 0.5 சதவிகிதம் வட்டியை குறைப்பதாகவும் மற்றும் இனிவரும் நாட்களிலும் வட்டி விகித குறைப்பு ஆனது இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

இந்த அமெரிக்காவின் வட்டி விகித குறைப்பு நடவடிக்கை ஆனது அனைவரும் எதிர்பார்த்த ஒன்று ஆகும். தற்போது வரை அரை சதவிகிதம் வட்டி ஆனது குறைந்திருப்பது ஒரு தொடக்கம் ஆகும். அதாவது வருகின்ற நவம்பர் மாதத்தில் பொருளாதார காரணிகள் அடிப்படையில் வட்டி ஆனது மேலும் குறைக்கப்படும் என்றும், வருகின்ற 2025-வது ஆண்டிலும் இந்த போக்கு ஆனது தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட்டி விகித குறைப்பு நடவடிக்கைனுடைய தாக்கம் ஆனது இந்திய சந்தைகளில் அதிக அளவில் இருக்கும் என நம்பப்படுகிறது :

  • அமெரிக்காவில் உள்ள முதலீட்டாளர்கள் தொடர்ந்து 0.5% அல்லது 1 சதவிகிதம் வட்டி ஆனது குறையும் போது, இனி வட்டி விகிதம் ஆனது மேலும் தொடர்ந்து குறையும் என நம்பிக்கை கொள்வார்கள். அமெரிக்காவில் இப்படி தொடர்ந்து வட்டி ஆனது குறைக்கப்படும் போது, அதனுடைய தாக்கம் ஆனது இந்திய சந்தைகளில் அதிக அளவில் இருக்கும் என நம்பப்படுகிறது.
  • அமெரிக்காவின் வட்டி விகிதம் தொடர்ந்து குறையும் போது, அமெரிக்காவில் உள்ள முதலீட்டாளர்கள் இந்தியா போன்ற வேகமாக வளர்ச்சி அடையும் சந்தைகளுக்கு முதலீடுகள் செய்வார்கள்.
  • அதாவது அமெரிக்காவில் வட்டி விகிதம் குறைக்கப்பட்டால் இந்திய பங்குச்சந்தைகள் ஆனது சற்று வலுவடையும் என நம்பப்படுகிறது.
  • இந்த நடவடிக்கை ஆனது இந்திய பங்குச்சந்தைகளுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். அதுவும் லார்ஜ்கேப் பங்குகளில் முதலீடு அதிகரிக்க வாய்ப்புள்ளது என நம்பப்படுகிறது.

2020ம் ஆண்டுக்கு பிறகு தற்போதுதான் வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது :

அதாவது வருகின்ற நவம்பர் மாதத்தில் பொருளாதார காரணங்கள் அடிப்படையில் வட்டி விகிதம் ஆனது குறைக்கப்படும் என்றும், மேலும் 2025வது ஆண்டிலும் இந்த போக்கு ஆனது தொடரும் என்றும் (Interest Rate Cut Action Of US) தெரிவிக்கப்பட்டுள்ளது. வட்டி விகித குறைப்பு குறித்த அறிவிப்பு 18/09/2024 அன்று வெளியான உடனே உயர்ந்த அமெரிக்க பங்குச்சந்தைகள் ஆனது இறுதியில் நெகட்டிவாக முடிவடைந்தன. இதனால் இந்திய பங்குச்சந்தையில் முதலீட்டாளர்கள் பலரும் முதலீடு செய்ய தொடங்குவார்கள் மற்றும் இந்திய பங்குச்சந்தைகள் ஆனது எழுச்சி அடைய வாய்ப்புள்ளது. இந்த நிலையில் இன்றைய வர்த்தகத்தில் முதலீட்டாளர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நிலை ஆனது ஏற்பட்டுள்ளது. 

Latest Slideshows

Leave a Reply