Interesting Facts About Bats : வௌவால்கள் பற்றிய அற்புதமான தகவல்கள்

வெளவால்கள் பறக்கவல்ல முதுகெலும்புள்ள பாலூட்டிகள் ஆகும். இவற்றின் கைகள் இறகுகளாக மாறி பறக்கின்றன. இவை பறக்கும் திறன் கொண்ட பாலூட்டியாகும். பெரும்பாலான பறவைகளை விட வெளவால்கள் பறப்பதில் அதிக சுறுசுறுப்பானவை, மெல்லிய சவ்வுடன் மூடப்பட்ட மிக நீளமான விரிந்த இறக்கைகளுடன் பறக்கின்றன. இந்நிலையில் வௌவால்கள் பற்றிய தகவல்களை (Interesting Facts About Bats) தற்போது காணலாம்.

வௌவால்கள் பற்றிய சில உண்மைகள் (Interesting Facts About Bats)

விலங்குகளிடமிருந்து மனிதனுக்கு தொற்றுநோய் பரவினால் அதற்கு வௌவால்கள் தான் காரணம் என எதிர்மறை எண்ணங்கள் காட்டுத் தீ போல் பரவுகின்றன. ஆனால் இயற்கை ஆர்வலர்கள் வௌவால்கள் இதற்கு காரணம் இல்லை என தெரிவிக்கின்றனர். தமிழ்நாட்டின் பல பகுதிகளில் பல நூற்றாண்டு காலமாக மனித குடியிருப்புகளை ஒட்டியுள்ள மரங்கள், பாழடைந்த கட்டிடங்கள், பழமையான கோவில்கள் ஆகியவற்றில் ஆயிரக்கணக்கான வௌவால்கள் (Interesting Facts About Bats) வாழ்ந்து வருகின்றன. இருப்பினும், இன்றுவரை வௌவால்கள் மூலம் அருகில் வசிக்கும் மக்களுக்கு வைரஸ் பரவியதற்கான பதிவுகள் எதுவும் இல்லை.

வௌவால்களின் பங்கு

வௌவால்கள் மட்டுமே பறக்கும் திறன் கொண்ட பாலூட்டிகள் ஆகும். பூமியில் 1200 சிற்றின வகைகளை சேர்ந்த வெளவால்கள் உள்ளன. பூமியில் உள்ள அனைத்து பாலூட்டிகளில் ஐந்தில் ஒரு பங்கு வௌவால்கள் உள்ளன. இந்தியாவில் 120 வகையான வெளவால்கள் உள்ளன. தமிழ்ச் சமூகமும் வௌவால்களும் பல்லாயிரம் ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்திருப்பதை நற்றிணை பாடல்கள் (Interesting Facts About Bats) உறுதிப்படுத்துகின்றன. நமது கிராமப்புறங்களில் மரங்கள் மற்றும் பாழடைந்த கட்டிடங்களில் 3 வகையான பழந்தின்னி  வௌவால்களை ஆயிரக்கணக்கில் பார்க்கலாம். இவை பூச்சிகள், பழங்கள் ஆகியவற்றை உண்பதோடு, மகரந்தச் சேர்க்கையில் பெரும் பங்கு வகிக்கின்றன. இரவு நேரத்தில் மலர்கிற இலவம் பஞ்சு மலர் பூக்களின் மகரந்தச் சேர்க்கையில் இந்த வௌவால்களின் பங்கு முக்கியமானது.

வௌவால்களின் ஆக்கிரமிப்பு

தாமிரபரணி ஆற்றங்கரையோரம் அதிகளவில் உள்ள இலுப்பை, நாவல், அத்தி போன்ற மரங்கள் அனைத்தும் வௌவால்களால் விதைக்கப்பட்டவையே. இந்தியாவில் பூச்சி உண்ணும் வெளவால்கள் (Interesting Facts About Bats) நூற்றுக்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன. கிராமப்புறங்களில் உள்ள பழமையான கோவில்கள், குகைகள், பாழடைந்த கட்டிடங்கள் மற்றும் பாலங்கள் ஆகியவற்றில் 6 சிற்றினங்களை சேர்ந்த வௌவால்கள் இருப்பதை காணலாம்.

உழவனின் நண்பனாக விளங்கும் வௌவால்கள்

இந்த பூச்சி உண்ணும் வெளவால்கள் மீயொலி அலைகளை எழுப்பி பூச்சிகளைப் பிடித்து உண்ணுகின்றன. விவசாய வயல்களில் பயிர்களை சேதப்படுத்தும் பூச்சிகளை உண்பதன் மூலம் வௌவால்கள் உழவனின் நண்பனாக விளங்குகின்றன. ஒரு சிறிய வௌவால் ஒரு இரவில் 500 பூச்சிகளை உண்பதாக ஆய்வுகள் மூலம் தெரிவிக்கின்றனர்.

Latest Slideshows

Leave a Reply