Interesting Facts About Common Ostrich : நெருப்புக்கோழி பற்றிய சில சுவாரசியமான தகவல்கள்

ஆப்பிரிக்க வனப்பகுதியில் உள்ள விசித்திரமான பறவைகளில் நெருப்புக்கோழியும் ஒன்று. இந்த நெருப்புக்கோழி (Interesting Facts About Common Ostrich) தீக்கோழி எனவும் அழைக்கப்படுகிறது. இவை நீண்ட கழுத்து மற்றும் கால்கள், பெரிய இறகுகள் மற்றும் உடல்களைக் கொண்டுள்ளன. மேலும் இவற்றால் பறக்க முடியாது. இவை பெரும்பாலும் திறந்தவெளி சமவெளிகளில் காணப்படுகின்றன. நெருப்புக்கோழியின் கண் அதன் மூளையை விடப் பெரியது என்று பெரும்பாலான மக்கள் கேள்விப்பட்டிருப்பார்கள். உங்களுக்குத் தெரியாத இந்த விசித்திரமான பறவையைப் பற்றிய சுவாரசியமான உண்மைகளை இங்கே காணலாம்.

நெருப்புக்கோழி (Interesting Facts About Common Ostrich)

உணவு

நெருப்புக்கோழி புல், செடிகள், பழங்கள், பூக்கள், விதைகள், பூச்சிகள் மற்றும் ஊர்வன உட்பட அனைத்தையும் சாப்பிடும். நெருப்புக்கோழிக்கு பற்கள் இல்லாததால் (Interesting Facts About Common Ostrich) அவை உணவை அரைத்து உண்பதற்காகவே சிறிய கற்களை விழுங்கும். தண்ணீர் பெரும்பாலும் தேவைப்படுவதில்லை தாவரங்களில் இருந்தே தண்ணீரை எடுத்துக்கொள்கிறது.

இனப்பெருக்கம்

ஆண் நெருப்புக்கோழி பெண்களை ஈர்க்க ஒரு இனச்சேர்க்கை நடனத்தை செய்கின்றன. நடனம் போதுமானதாக இருந்தால், ஒரு பெண் நெருப்புக்கோழி குறிப்பிட்ட ஆணுடன் இணை சேரும், ஆனால் சிறிது நேரம் (Interesting Facts About Common Ostrich) கடினமாக விளையாடிய பின்னரே இணை சேரும். ஆண் நெருப்புக்கோழி இனச்சேர்க்கைக்குத் தயாராகும் போது, அதன் கால்கள் அடர் சிவப்பு நிறமாக மாறும், இது பெண் நெருப்புக்கோழிக்கும் மற்ற ஆண் நெருப்புக்கோழிக்கும் அவை இனச்சேர்க்கைக்கு தயாராக இருப்பதைக் காட்டுகிறது.

நெருப்புக்கோழி குடும்பம்

Interesting Facts About Common Ostrich - Platform Tamil

நெருப்புக்கோழி கூட்டுக் குடும்பமாக வாழும், நெருப்புக்கோழி பொதுவாக பத்து கோழிகளுடன் ஒன்றாக சேர்ந்து வாழ்கின்றன. அவை ஆதிக்கம் செலுத்தும் ஆண், பெண் தலைமையிலான இருப்பிடத்தை (Interesting Facts About Common Ostrich) பாதுகாக்கும். ஆண் நெருப்புக்கோழியின் எச்சரிக்கை அழைப்பு சத்தமாகவும் ஆழமாகவும் இருக்கும். தூரத்தில் இருந்து கேட்கும் சிங்கத்தின் கர்ஜனை போன்று இருக்கும்.

நெருப்புக்கோழியின் எடை மற்றும் உயரம்

நெருப்புக்கோழி 63 முதல் 145 கிலோ எடை கொண்ட பறவையாகும். நெருப்புக்கோழி சுமார் 2.5 மீட்டர் அதாவது, 8 அடி வரை உயரமாக வளரக்கூடியது.

நெருப்புக்கோழியின் ஆயுட்காலம்

நெருப்புக்கோழியின் ஆயுட்காலமானது 40 முதல் 45 ஆண்டுகள் வரை வாழும். இவை ஆப்பிரிக்காவின் வறண்ட, சூடான சவன்னாக்கள் மற்றும் வனப்பகுதிகளில் வாழ்கின்றன.

Latest Slideshows

Leave a Reply