Interesting Facts About Crocodile : முதலைகள் பற்றிய சில சுவாரசியமான தகவல்கள்

முதலைகள் மிகவும் ஆபத்தான விலங்கு ஆகும். இவை பொதுவாக நன்னீரில் வாழ்கின்றன. இருந்தாலும் உப்பு நீரிலும் வாழலாம். இவற்றின் பற்கள் மிகவும் கூர்மையாக இருக்கும். இவை எலும்புகளை கடிக்கவும், தசைகளை கிழிக்கவும் உதவியாக இருக்கிறது. முதலை ஒரு அகலமான மற்றும் தட்டையான தலையுடன் கொண்ட ஊர்வன ஆகும். இவற்றின் உடல் பகுதியின் மேல் பகுதியில் கடினமான தோலைக் கொண்டுள்ளது. மூன்று விரல்களை கொண்டு குறுகிய கால்களுடன் இருக்கின்றன. இவை நீருக்கு அடியிலும் மேற்பரப்பிலும் வாலை கொண்டு நீந்துகின்றன. இந்நிலையில் முதலை பற்றிய சில உண்மைகளை (Interesting Facts About Crocodile) பார்க்கலாம்.

Interesting Facts About Crocodile :

  • முதலைகள் ஒரு கடினமான ஓடுகளை கொண்ட ஊர்வனை ஆகும். இவற்றின் தோல்கள் கடினமான கொம்பு செதில்களுடன் காணப்படுகிது.
  • முதலைகளின் சதை பொதுவாக மஞ்சள் நிறத்தில் இருக்கும். இருந்தாலும் முதலைகளின் வகையைப் பொறுத்து பச்சை மற்றும் பழுப்பு நிறத்தில் இருக்கும்.
  • முதலைக்கு கூர்மையான பற்கள் உள்ளன, இவை தாங்கள் உண்ணக்கூடிய இரையின் கடினமான தோல்களைக் கடிக்க உதவுகிறது. இவற்றின் பெரிய தாடைகள் இரையைப் பிடிக்க பயன்படுகிறது.
  • முதலைகள் பொதுவாக 1000 பவுண்ட்க்கு மேல் எடையும் மற்றும் 23 அடி நீளமும் வளரும்.
  • முதலையின் உடலை சுற்றி இருக்கும் ஓடுகள் இவற்றை பாதுகாப்பாக வைத்திருக்கின்றன.
  • முதலைகள் பாலுட்டி விலங்கு, மீன், பறவைகள், நீர்வீழ்ச்சிகள் ஆகியவற்றை பிடிக்க பற்களை பயன்படுத்துகின்றன.
  • உலகில் இருக்கக்கூடிய மிகப்பெரிய ஊர்வனைகளில் முதலையும் உள்ளன. ஆனால் சிலவற்றில் சிறியதாக இருக்கும்.
  • முதலைகள் அதிகமாக தண்ணீரில் இருக்கின்றன. இருந்தாலும் வறண்ட நிலத்திலும் காணப்படுகின்றன.
  • நீண்ட மூக்கு கொண்ட ஊர்வனை ஆகும்.
  • முதலைகள் செதில் தோல் கொண்ட குளிர் இரத்த ஊர்வனை ஆகும். இவை டைனோசர்கள் காலத்தில் இருந்தே பூமியில் வாழ்கின்றன. இதனால் இவற்றை வாழும் படிமங்கள் என அழைக்கப்படுகின்றன.

முதலையின் இனப்பெருக்கமும் ஆயுட்காலமும் :

முதலைகள் ஒரே நேரத்தில் 12 முதல் 48 முட்டைகளை இடுகின்றன. இவற்றை 50 முதல் 100 நாட்கள் வரை அடைகாக்கின்றன. முதலையின் ஆயுட்காலம் இனங்களின் மூலம் வேறுபடுகின்றன. அதாவது சில குள்ள முதலைகள் 40 வருடங்கள் வரை இருக்கின்றன. நைல் முதலை போன்ற மற்ற வகை முதலைகள் 80 ஆண்டுகள் வரை வாழ்கின்றன (Interesting Facts About Crocodile) என கூறப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply