Interesting Facts About Donkey : கழுதைகள் பற்றிய சில சுவாரசியமான தகவல்கள்

உலக கழுதை தினம் மே 8 அன்று கொண்டாடப்படுகிறது. கழுதைகள் அமைதி, போர் மற்றும் வேலை காலங்களில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதர்களுக்கு உண்மையுள்ள உதவியாளர்களாக இருந்த விலங்குகள் ஆகும். உலகெங்கிலும் உள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த உதவும் தாழ்மையான கழுதையின் முயற்சிகளை அங்கீகரிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது. அவை பெரும்பாலும் வளர்ச்சியடையாத நாடுகளில் மூட்டை விலங்குகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. வேலை செய்யும் கழுதைகள் பெரும்பாலும் வாழ்வாதார மட்டத்தில் அல்லது அதற்குக் கீழே வாழும் மக்களுடன் தொடர்புடையவை. வளர்ந்த நாடுகளில் இனப்பெருக்கத்திற்காக அல்லது செல்லப்பிராணிகளாக சிறிய எண்ணிக்கையிலான கழுதைகள் வளர்க்கப்படுகின்றன.

Interesting Facts About Donkey :

  • நம் அன்றாட வாழ்வில் கழுதைப் பற்றி பேசாமல் இருக்க மாட்டோம். ஒருவரை திட்டவோ அல்லது அதன் சிறப்பை கூறுவதற்காகவோ கழுதையை பற்றி தினமும் ஏதாவது ஒரு வகையில் பேசுகிறோம். இந்தக் கழுதையின் சிறப்பம்சங்களை இங்கு பார்க்கலாம்.
  • இந்தக் கழுதை குதிரை இனத்தை சேர்ந்தது தான். இது இறைச்சியை உண்பதில்லை.
  • கழுதை மிகவும் பொறுமையாகவும், மென்மையாகவும் இருப்பதால் பலர் இதைப் பயன்படுத்துகிறார்கள்.
  • கழுதைக்கு எதிர்ப்பு சக்தி அதிகம். அதனால்தான் இது வறண்ட பகுதிகளிலும் ஓய்வின்றி வேலை செய்கிறது. மேலும், காட்டில் வாழும் கழுதைக்கு சற்று மூர்க்கத்தனம் இருக்கும் ஆனால் வீட்டில் வாழும் கழுதைக்கு அந்த இடத்திற்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொள்ளும்.
  • கழுதைகள் கடினமாக உழைத்தாலும் மிகக் குறைவாகவே சாப்பிடுகின்றன. புல் செடிகள் அதிகம் உண்ணும். ஆனால் இந்த பேப்பரை எப்படி சாப்பிடப் பழகியது என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.

50 வருடம் உயிர் வாழும் :

அதிக உணவு கொடுத்தால் அதிக வேலை கிடைக்கும் என்பார்கள். ஆனால், அதிக உணவை கொடுத்தால் கழுதைக்கு லெமிட்டினிடிஸ் என்ற நோய் வரும். கழுதைகள் உண்மையில் குதிரைகளை விட வலிமையானவை. அதைத் தவிர கழுதை மிகவும் புத்திசாலித்தனமான சமூக விலங்கு. கழுதைகள் சராசரியாக 50 ஆண்டுகள் வாழ்கின்றன. கழுதைகள் அப்ராணி விலங்குகள் என்றாலும், இது ஒரு தன்மான சிங்கம்.

பிடிக்கவில்லை என்றால், நாம் எவ்வளவு வற்புறுத்தினாலும், அடித்தாலும் அந்த இடத்தை விட்டு நகராது. அதையும் மீறி நாம் கட்டாயப்படுத்தினால், அது நம்மை உதைத்து விடும். கழுதைக்கு ஒருவரை பிடித்துவிட்டால் சோறு, தண்ணீரின்றி சுமைகளைத் தூக்கும். கழுதைகள் எதைச் செய்தாலும் யோசித்த பின்னரே செய்கின்றன என்று கழுதைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்தவர்கள் சில சுவாரசியமான (Interesting Facts About Donkey) விஷயத்தைச் சொல்லியிருக்கிறார்கள். பாதுகாப்பற்றதாக உணர்ந்தால் அதைச் செய்யாது.

கழுதைகளுக்கு மழை என்றாலே பிடிக்காது :

கழுதைகளுக்கு பெரிய காதுகள் உள்ளன. அதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. கழுதை வெளியில் கத்தினால் 60 மைல் தொலைவில் உள்ள கழுதைகளுக்கு கேட்கும். இன்னொரு விஷயம், காதுகள் பெரிதாக இருப்பதால், உடல் சூடு பிடிக்காமல் குளிர்ச்சியாக இருக்கும். கழுதைகளுக்கு மழை பிடிக்காது. மழையைத் தாங்கும் தோல் இல்லை என்பதே அதற்குக் காரணம். இதன் தோல் மிகவும் உணர்திறன் கொண்டது. மழையில் நனைந்தால் உடம்பு கெடும் என்பது அதற்கு நன்றாகவே தெரியும். கழுதைகள் கூட்டத்தை விட தனியாக இருப்பதையே விரும்புகின்றன, அதனால்தான் தனியாக இருக்கும் கழுதைகள் கூட்டத்தில் இருப்பதை விட சுறுசுறுப்பாக இருக்கும்.

Latest Slideshows

Leave a Reply