Interesting Facts About Eagle: வானத்தின் அரசனின் சுவாரஸ்ய தகவல்கள்

வானத்தின் அரசன் என்று சொல்லக்கூடிய கழுகைப் பற்றி இப்பகுதியில் காண்போம். மனிதர்கள் உருவாக்கிய ஒரு சில ஆயுதங்களை கொலையாளி இயந்திரம் என்று சொல்லுவார்கள் ஏனென்றால் அவ்வளவு இழப்புகளை துல்லியமாக ஏற்படுத்த முடியும். இதே போன்று இயற்கையே உருவாக்கின துல்லியமான கொலையாளி இயந்திரம் என்றால் அது கழுகுதான்.

வேட்டைக்கு ஏற்றாற்போல் கழுகின் உடல் அமைப்பு என்பது இயற்கை துல்லியமாக வடிவமைத்துள்ளது. இவ்வளவு சிறந்த உறுப்புகளை உடலில் வைத்துக்கொண்டு கழுகுகள் வேட்டையாடுவதை பார்ப்பதற்கே பிரமிப்பாக இருக்கும். சில கழுகுகள் தன் உடல் எடையை விட பல மடங்கு அதிகமாக எடையுள்ள வேட்டைகளை எல்லாம் வேட்டையாடும்.

கழுகுகள் வேட்டையாடும் தன்மைக்கு ஏற்ப அவற்றை வகை படுத்தியுள்ளனர். இறக்கையை விரித்து வானத்தில் வட்டம் அடித்து அதே வேகத்தில் கீழேவந்து அதனுடைய இரையை வேட்டையாடும். வேட்டையாடுவதில் சிறந்து விளங்குவதால்தான் கழுகு பறவையின் உணவு சங்கலியில் முதல் இடத்தில் இருக்கிறது. கழுகுகள் அதிகமாக பகல் நேரங்களில் தான் வேட்டையாடும்.

கழுகுகள் 20 வருடம் வரை உயிர் வாழ கூடியது. அதுவே மனிதர்களால் பிடிக்கப்பட்டு வளர்க்கப்படும் சூழல் ஏற்பட்டால் அந்த 20 வருடம் என்பது கொஞ்சம் அதிகமாகவும் வாய்ப்புகள் இருக்கிறது. ஒரு கழுகு 10,000 அடி உயரம் வரை பறக்கும். அதிலும் சில கழுகு இனங்கள் 15,000 அடி உயரம்வரை பறக்கும். கழுகுகளின் இனங்களில் ஆண் கழுகுகளை விட பெண் கழுகுகள் தான் பெரிதாக இருக்கும்.

பொதுவாக கழுகுகள் இரண்டு முட்டைகளை இடும். முதல் முட்டையில் இருந்து வெளிவரும் குஞ்சானது அடுத்த முட்டையில் இருந்து வெளிவரும் குஞ்சை கொத்தி கொன்று விடும். இப்படி கொத்துவதை தாய், தந்தை கழுகு பார்த்தால் அவற்றை கண்டுகொள்ளாது.   

கழுகின் வகைகள் அதன் இறகுகள்:

பறவை இனங்களிலே பெரிதாக இருக்கக்கூடிய பறவை இனம் கழுகுகள். ஒருசில கழுகு இனங்கள் 3 அடி உயரம் வரையிலும் வளரும். அதன் இறக்கை 7 அடி நீளம் இருக்கும். அதே சமயம் எல்லா கழுகுகளும் ஒரே அளவில் இருப்பது கிடையாது. ஒவ்வொரு அளவில் கழுகுகள் இருக்கிறது.

கழுகுகளின் இறகுகள் அடிக்கடி இயற்கையாகவே கீழே விழும். அப்படி ஒரு பக்க இறக்கையின் இறகுகள் கீழே விழுந்தால், இன்னொரு பக்க இறக்கைகளில் இருக்கக்கூடிய இறகுகளை கழுகுகளே எடுத்து கீழே விடும். ஏனென்றால் இரண்டு பக்கமும் இறக்கைகள் சரியான அளவில் சமநிலையில் இருந்தால் தான் கழுகுகளால் உயரமாகவும், எதிர்பார்த்த வேகத்திலும் பறக்க முடியும். அந்த அளவிற்கு சமநிலையில் தன்னுடைய உடலை வைத்து கொள்ளும். உலகில் மொத்தம் 60 முதல் 70 வகையான கழுகுகள் இருக்கிறது.

ஃபல்கன்ஸ் (Falcons) என்று சொல்லக்கூடிய வல்லூறுகள், வால்ச்சர்ஸ் (Vulture) என்று சொல்லக்கூடிய பிணந்தின்னிக் கழுகுகளை எல்லாம் ஒன்றுதான் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் இது தனித்தனியான கழுகு வகைகள். கழுகிற்கு எழால், கங்கு, கூளி, பருந்து, பாறு, பணவை, பாறு, பூகம் இப்படி நிறைய பெயர்கள் இருக்கிறது. இந்த ஒவ்வொரு பெயருமே ஒவ்வொரு பறவையை நாம் குறிக்கும்போது அதை குறிக்கும் பெயர்கள்.     

கழுகின் கண்கள்:

கழுகின்  கண்கள் மட்டும் வேட்டைக்கு துணையாக இருப்பதில்லை. அதனுடைய கண்களும் வேட்டைக்கு பக்கபலமாக இருக்கிறது. அந்த அளவிற்கு சிறப்பு வாய்ந்த கண்களாக கழுகின் கண்கள் இருக்கிறது. மனிதர்களை விட 4 மடங்கில் இருந்து 8 மடங்கு வரை துல்லியமாக பார்க்கும் திறன் கழுகுகளுக்கு இருக்கிறது. அதிலும் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள விஷயங்களையும் துல்லியமாக கழுகுகளால் பார்க்க முடியும். இவை அனைத்தையும் ஒரு

இடத்தில் அமர்ந்து பார்ப்பது கிடையாது. பறக்கும்போது பறந்து கொண்டே துல்லியமாக கணித்து இரையை வேட்டையாடும் திறன் கழுகிற்கு இருக்கிறது. இவ்வளவு தெளிவாக கழுகுகள் பார்க்க காரணம் அதனுடைய முக அமைப்பில் கண்கள் பெரிதாக இருப்பதால்தான். அந்த அளவிற்கு பெரியதாக கண்களை இயற்கை படைத்திருப்பதால்தான் கழுகுகள் துல்லியமாக இரைகளை பார்க்க முடிகிறது.   

கழுகின் மூக்கு:

வானத்தில் இருந்து சரியான வேகத்தில் கீழே இறங்கும்போதும் கழுகுகளால் நன்கு மூச்சை விட முடியும். இப்படி மூச்சை சீராக விடுவதற்கே அதன் மூக்கின் அமைப்பு அமைந்துள்ளது. கழுகுகள்  மணிக்கு 120 முதல் 140 கிலோமீட்டர் வரையிலான வேகத்தில் வானத்தில் இருந்து கீழே கழுகுகளால் பயணிக்க முடியும்.   அதுவே ஒரு சில கழுகுகள் மணிக்கு 200 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும். அவ்வளவு வேகத்தில் பயணிக்கும் போதும் அதனுடைய மூச்சானது சீராக இருக்கும் வகையில் அதனுடைய மூக்கின் துவாரம் அமைத்துள்ளது. 

கழுகின் அலகு:

கழுகின் அலகு வளைந்து மிகவும் கூர்மையாக இருக்கும். கழுகின் அலகானது வளர்ந்து கொண்டே இருக்கும். எப்படி மனிதர்களுக்கு நகம் வளர்கிறதோ அது போன்று கழுகுகளுக்கு அதனுடைய அலகு வளர்ந்து கொண்டே இருக்கும். அதனால் தான் எவ்வளவு வயதானாலும் கழுகுகள் அதனுடைய அலகுகளை கூர்மையாக வைத்திருக்கிறது.

கழுகின் கால்கள்:

கழுகிற்கு இருக்கக்கூடிய முக்கியமான ஆயுதம் என்பது அதனுடைய கால்கள். தன்னுடைய கால் பாதத்தில் உள்ள நகங்களை வைத்து இரையை துல்லியமாக பிடித்து வானத்தில் பறக்க கூடிய திறன் படைத்தது தான் கழுகுகள். 

செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் கழுகுகள்:

ஆப்ரிக்கா கண்டத்தில்தான் கழுகுகள் அதிகம் தென்படுகிறது. அதிலும் பாலைவனத்தில் மட்டும் இருக்கக்கூடிய கழுகு இனங்களும் இருக்கிறது. இப்படி பாலைவனத்தில் தென்பட கூடிய கழுகுகளை பிடித்து அவற்றை வேட்டையாடும் தன்மைக்கு ஏற்ப பயிற்சி கொடுத்து அதை ஒரு செல்ல பிராணியாக வளர்க்க கூடிய பழக்கம்.

துபாய், அரேபிய நாடுகளில் அதிகமாக இருக்கிறது. இது மட்டுமின்றி உலகத்திலே அதிகாரபூர்வமாக பறப்பதில் கின்னஸ் சாதனையை படைத்த கழுகும் துபாயில் இருந்துதான் பறந்தது. அந்த அளவிற்கு கழுகுகள் என்பது துபாய், சவுதி போன்ற அரபு நாடுகளில் பிரபலமாக உள்ளது. இது மட்டுமின்றி அதிகாரபூர்வமாக கழுகுகளை தங்களின் அடையாளமாக எடுத்து கொண்ட நாடுகளும் இருக்கிறது.

அமெரிக்காவின் தேசிய பறவை (Bald eagle) பால்டு ஈகிள் என்று சொல்லக்கூடிய ஒரு கழுகு இனம். அந்த நாட்டின் அதிகார பூர்வ முத்திரையிலும் இந்த கழுகுதான் அமைந்துள்ளது. இதே போன்று பிலிப்பைன்ஸ் நாட்டின் தேசிய பறவையும் கழுகுதான். இதுமட்டுமின்றி பல நாடுகளின் கலாச்சாரங்களிலும் கழுகுகளுக்கு முக்கிய இடம் கொடுக்கப்பட்டுள்ளது.

புனிதமாக பார்க்கப்பட்ட கழுகுகள்:

நேட்டிவ் அமெரிக்கர்கள் கழுகுகளை புனிதமாக பார்த்தார்கள். கடவுளுக்கும், மனிதர்களுக்கும் இடையே இருக்க கூடிய தூதர்களாக பார்த்தனர். கழுகுகளின் வேட்டையாடும் தன்மை, பறக்கும் வல்லமை இவற்றையல்லாம் ஒரு தூதனுக்கு அடையாளமாக கருதினர். ஆதலால் தான் கழுகின் இறகையும் புனிதமாக கருதினர்.

ஏதாவது ஒரு பெரிய போட்டி அவர்களுக்குள் நடந்தால் வெற்றி பெரும் வீரனுக்கு பரிசாக கழுகின் இறகுகளை தரக்கூடிய பழக்கம் என்பது பண்டைய நேட்டிவ் அமெரிக்கர்கள் மத்தியில் இருந்தது. இந்த காரணங்களால் தான் பழங்குடி அமெரிக்கர்களுடைய தலைவர்களின் கிரீடத்தில் கழுகுகளின் இறக்கைகளை வைத்திருப்பார்கள். எவ்வளவு இறக்கைகள் அந்த தலைவருக்கு இருக்கிறதோ அந்த அளவிற்கு வலிமைமிக்க தலைவர் அவர் என்று கருதினார்கள். 

சிறப்புகள்:

கழுகுகள் வட்டம் அடித்து கொண்டே தான் இருக்கும். அவைகள் ஏன் வட்டமடிக்கிறது என்றால் தன்னுடைய பறக்கும் தன்மையை தக்க வைத்து கொள்கிறது. இப்படி பறந்து கொண்டே இருக்கும் போது இரையை கண்டுபிடித்து அவற்றை சரியாக வேட்டையாடி சாப்பிடும். கழுகுகளை தற்போது (Drones) ட்ரோன்கள் மேம்பாட்டிற்கும் பயன்படுத்துகிறார்கள். அதாவது அத்துமீறலாக பயன்படுத்தப்படும் ட்ரோன்களை தடுப்பதற்கு கழுகுகளை பயிற்சி கொடுக்க பல நாடுகளின் காவல்துறை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கழுகுகளை பயன்படுத்தி ட்ரோன்களை பிடித்து பத்திரமாக காவல் துறையிடம் எடுத்துக்கொண்டு வரக்கூடிய பழக்கத்திற்கு அந்த கழுகுகளை பயிற்று கொடுக்கின்றனர். இப்படி உளவாளியாக பயன்படுத்துவதற்கு கழுகுகள் பயன்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply