Interesting Facts About Giraffe : ஒட்டகச்சிவிங்கி பற்றிய சில சுவாரசியமான தகவல்கள்

  • ஒட்டகச்சிவிங்கி ஆப்பிரிக்காவில் காணப்படும் பாலூட்டி விலங்கினங்களுள் உலகின் இரண்டாவது மிகப்பெரிய விலங்கினம் (Interesting Facts About Giraffe) இதுவாகும்.
  • பொதுவாக ஆண் ஒட்டகச்சிவிங்கியை விட பெண் ஒட்டகச்சிவிங்கிகள் எடையிலும், உயரத்திலும் குறைந்து காணப்படுகிறது.
  • ஆண் ஒட்டகச்சிவிங்கியின் உயரம் சராசரியாக 16 முதல் 18 அடியாகும். இதனுடைய எடையானது 900 கிலோ கிராம் ஆகும்.
  • பெண் ஒட்டகச்சிவிங்கிகள் ஆண் ஒட்டகச்சிவிங்கியை விட பொதுவாக உயரத்திலும் நிறையிலும் குறைந்தவை.
  • ஒட்டகச்சிவிங்கிகளின் அடிவயிற்றுப் பகுதியை தவிர உடல் முழுவதும் பிரவுன் கலர் புள்ளிகள் காணப்படுகின்றன. இந்த புள்ளிகளின் அமைப்பு ஒவ்வொன்றும் தனித்துவமானவை. ஒட்டகச்சிவிங்கிகள் நீண்ட நீல நிற நாக்கினைக் கொண்டுள்ளன.
  • ஒட்டகச்சிவிங்கிகளின் முன்னங்கால்கள் பின்னங்கால்களைவிட சராசரியாக 10 சதவீதம் நீளமானவை. இவற்றின் இதயம் 11 கிலோ நிறையுடையது.

Interesting Facts About Giraffe :

வெள்ளை ஒட்டகச்சிவிங்கிகள் :

உலகிலேயே அரிய வகை உயிரினமான வெள்ளை ஒட்டகச்சிவிங்கிகள் கென்யா நாட்டில் உள்ள வனவிலங்கு சரணாலயத்தில் இருக்கின்றன. கடந்த 2017-ம் ஆண்டில்தான் முதன்முதலாக இந்த வெள்ளை ஒட்டகச்சிவிங்கி கென்யா வனப்பகுதியில் கண்டறியப்பட்டது.

ஒட்டகச்சிவிங்கியின் தனித்துவமான பண்புகள் :

ஒட்டகச்சிவிங்கியின் தனித்துவ பண்பாக அதற்கு நீண்ட கழுத்து இருப்பதால் உயரமான மரங்களில் உள்ள இலைகளை உண்பதற்கு மிகவும் உதவியாக இருக்கிறது. ஒட்டகச்சிவிங்கியின் கழுத்தில் அமைந்துள்ள சிறப்பு அமைப்பு மற்ற விலங்குகளுக்குக் கிடையாது. இதனுடைய கண் பார்வை மிகவும் தெளிவாகவும், கூர்மையாகவும் இருக்கும். தன்னை வேட்டையாட வரும் விலங்குகளை தூரத்தில் இருந்தே கணிக்கும் திறன் கொண்டது.

ஒட்டகச்சிவிங்கியின் இரத்த அழுத்த மாற்றம் :

பூமியில் வாழும் இரண்டாவது மிகப்பெரிய உயிரினமான ஒட்டகச்சிவிங்கியின் இரத்த அழுத்த மாற்றம் (Interesting Facts About Giraffe) வினோதமானது. பொதுவாக ஒரு மனிதருக்கு சராசரி இரத்த அழுத்தம் 120/70 என்று இருக்கும். ஆனால் ஒட்டகச்சிவிங்கியின் இரத்த அழுத்தம் எவ்வளவு தெரியுமா 300/200. உலகிலுள்ள மற்ற விலங்குகளையும் விட அதிக இரத்த அழுத்தம் உள்ள ஒரே விலங்கு ஒட்டகச்சிவிங்கி மட்டும்தான்.

ஒட்டகச்சிவிங்கியின் வேகம் :

ஒட்டகச்சிவிங்கியின் நடையானது பின்னோக்கி தள்ளப்படுவதால் சராசரியாக ஒட்டகச்சிவிங்கிகளால் மணிக்கு 50 கி.மீ (35 மைல்கள்) வேகத்தில் ஓட முடியும்.

ஒட்டகச்சிவிங்கியின் ஆயுட்கலாம் :

ஒட்டகச்சிவிங்கிகள் சிங்கம் போன்ற விலங்கால் வேட்டையாடப்படாமல் இருந்தால் 26 ஆண்டுகள் வரை உயிர் வாழும் திறன் உடையது.

ஒட்டகச்சிவிங்கி தினம் (World Giraffe Day) :

உலக ஒட்டகச்சிவிங்கி தினம் ஆண்டுதோறும் ஜூன் 21 அன்று பூமியில் வாழும் உயரமான பாலூட்டிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஆதரவளிக்கவும் கொண்டாடப்படுகிறது.

40 சதவிகிதம் ஒட்டகச்சிவிங்கி அழிப்பு :

கடந்த 30 வருடங்களில் 40 சதவிகித ஒட்டகச்சிவிங்கிகள் வேட்டைக்காரர்கள் மற்றும் கடத்தல்காரர்களால் அழிக்கப்பட்டிருக்கின்றன என்று ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இந்த உலகம் அனைத்து உயிரினங்களும் வாழ்வதற்கான ஓர் இடம். ஒவ்வொரு உயிரினமாக அழிவைச் சந்தித்து வந்தால் பெரும் ஆபத்தில் போய் முடியும் என்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள்.

Latest Slideshows

Leave a Reply