Interesting Facts About Honey Bee : தேனீக்கள் பற்றிய சில சுவாரசியமான தகவல்கள்

தேனீக்கள் மூலம் தாவரங்களின் மகரந்த சேர்க்கை நடைபெறுகிறது. தாவர இனம் விரைந்து பெருகுகிறது. இவற்றிற்கு இரண்டு சிறகுகளும் இரண்டு உணர்ச்சி கொம்புகளும் இருக்கின்றன. தேனீக்கள் தரும் சுவை மிகுந்த தேன் மருந்தாக பயன்படுகிறது. தேனை கொடுக்கும் தேனீக்கள் (Interesting Facts About Honey Bee) கொட்டினால் உயிருக்கே ஆபத்தாகும். தேனீக்கள் எப்பொழுதும் கூட்டமாகவே வாழும். இந்த குழுக்களில் ஆண்தேனீ, ராணித்தேனீ, வேலைக்காரத்தேனீ என மூன்று வகையான தேனீக்கள் இருக்கின்றன. இந்த மூன்று தேனீக்களுக்கும் உடலமைப்பு மாறுபட்டிருக்கும். இவைகளின் கூட்டமைப்பினால் தான் தேன் கூடு உருவாகிறது. இவற்றில் ராணித்தேனீக்கும், வேலைக்கார தேனீக்களுக்கும் கொடுக்குகள் உள்ளன. ஆண்தேனீக்களுக்கு கொடுக்கு இல்லை. தேன் சேகரிக்கும் உறுப்பும் இல்லை. எனவே ஆண்தேனீக்கள் ராணித்தேனீயுடன் உறவுகொண்ட பிறகு இறந்துவிடும். உறவின் மூலம் ஆயிரக்கணக்கான உயிரணுக்களை அது பெற்றுக் கொள்கிறது. தன்னுடைய ஆயுட்காலம்  வரை முட்டையிடும் பணியை செய்கிறது.

ராணித்தேனீ ஒரு அறையைத் தேர்வு செய்து அதில் இனப்பெருக்கம் செய்கிறது. இதன்மூலம் முட்டையிலிருந்து வரும் லார்வாக்களுக்கு ராயல் ஜெல்லி எனப்படும் ஊட்டச்சத்து திரவம் பெறப்படுகிது. இந்த திரவத்தை பெற்ற தேனீக்கள் மட்டுமே நல்ல வளர்ச்சி அடைந்து ராணித்தேனியாக மாறுகிறது. வேலைக்காரத் தேனீக்களாக பெண் தேனீக்கள் இருக்கின்றன. இவைகள் குஞ்சு தேனீக்களுக்கு உணவளிப்பது, ராணித்தேனீக்களுக்கு (Interesting Facts About Honey Bee) தேவையான உதவிகளை செய்கின்றன. மேலும் உணவுகளை சேகரிப்பது, தேன்கூட்டைக் கட்டுவது, கூட்டை தூய்மையாக வைத்திருப்பது, மலரில் இருந்து மகரந்தத்தை சேகரித்து வருவது போன்ற வேலைகளை வேலைக்காரத் தேனீக்கள் செய்கிறது. தேன்கூடுகள் அறுங்கோண வடிவில் அமைந்திருக்கும். 

தேனீக்களின் வகைகள் (Interesting Facts About Honey Bee)

மலைத்தேனீ

மலைத்தேனீ, மலைப்பாறைகளிலும், உயர்ந்த மரங்களிலும் பெரிய அளவில் கூடு கட்டி வாழும். கொட்டும் தன்மை உடையவை. இவற்றின் விஷம் கொடியது. இவை அதிகமான தேனை சேகரிக்கும். தேனீ வளர்ப்பிற்கு இவை உகந்தவை அல்ல.

கொம்புத்தேனீ

இவை சிறிய தேனீக்கள் ஆகும். சிறிய மரக்கிளைகளிலும், புதர்களிலும் கூடு கட்டி வாழும். தேன் மிக (Interesting Facts About Honey Bee) குறைவாக கிடைக்கும். கொட்டும் தன்மையுடையது. வளர்ப்பதற்கு ஏற்றதல்ல.

அடுக்குத்தேனீ அல்லது இந்தியத்தேனீ

அடுக்குத்தேனீக்கள் தேன் அடைகளை அடுக்கடுக்காகக் கட்டிக்கொண்டு வாழும். கொட்டும் தன்மையுடையது. தேன் நன்றாகக் கிடைக்கும். வளர்ப்பதற்கு ஏற்றவையாகும்.

கொசுத்தேனீ

இந்த தேனீக்கள் கொசுக்களை போலவே இருக்கும். மெல்லிய (Interesting Facts About Honey Bee) உடலமைப்பு கொண்டவை. மரப்பிசின்களைக் கொண்டு கூடு கட்டி வாழும். வாயினால் கடிக்கும் தன்மை கொண்டவை. சிறிதளவு தேன் கிடைக்கும். வளர்ப்பதற்கு ஏற்றதல்ல.

Latest Slideshows

Leave a Reply