Interesting Facts About Hornbill Bird : இருவாச்சி பறவைகள் குறித்த சில சுவாரசியமான தகவல்கள்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வாழும் இருவாச்சி பறவைகள் சோலை காடுகளின் அடையாளமாக கருதப்படுகிறது. இவை கடைசி வரை ஒரே துணையுடன் பேரன்போடு வாழும் விதம் வியக்க வைக்கிறது. இந்தியாவின் உயிர்நாடியும், பல்லுயிர் பெருக்கத்தின் முக்கிய இடமான மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர், குஜராத் மாநிலத்தில் தொடங்கி தமிழ்நாட்டில் முடிவடைகிறது. 1.6 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட மேற்குத் தொடர்ச்சி மலையில் பல்வேறு அரிய வகை வனவிலங்குகள், தாவரங்கள் மற்றும் பறவைகள் உள்ளன. இதில் சோலைக்காடுகளின் அடையாளமாகவும், ஆரோக்கியமான இயற்கை சூழலின் அடையாளமாகவும் இருவாச்சி பறவை (Interesting Facts About Hornbill Bird) உள்ளது. இந்நிலையில் இவற்றை பற்றி சில சுவாரசியமான தகவல்களை காணலாம்.

இருவாச்சி பறவையின் சுவாரசிய தகவல்கள் (Interesting Facts About Hornbill Bird )

ஒருவனுக்கு ஒருத்தியாக வாழும் இருவாச்சி

இருவாச்சிகள் காடுகளின் பாதுகாவலனாக இருப்பதுடன், ஒருவனுக்கு ஒருத்தி என்பது போன்ற ஒரே குடும்ப வாழ்க்கை முறையிலும் வாழ்கின்றன. இவை இறுதிவரை ஒரே துணையுடன் ஒருவனுக்கு ஒருத்தி போல வாழ்வதும், பெண் பறவை (Interesting Facts About Hornbill Bird) முட்டைகளை அடைகாத்து குஞ்சுகளை வளர்ப்பது வரையிலும் ஆண் பறவை பேரன்புடன் அதற்கு உதவுவது தான் இதன் சிறப்பு. சோலைகள் போன்ற அடர்ந்த காடுகளில் மலைகளில் அதிகம் வாழ்கின்றன. பழங்கள் முதல் பாம்புகள் வரை அனைத்தையும் சாப்பிட்டு, எச்சம் மூலம் வன மரங்களை இனப்பெருக்கம் செய்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இனப்பெருக்க காலம்

இந்த பறவையின் இனப்பெருக்க காலம் என்பது பிப்ரவரி முதல் மே வரை ஆகும். இந்த பறவைகள் இணையோடு வாழக்கூடியவை. இனப்பெருக்க காலத்தில் இரண்டு பறவைகளும் ஒன்றாக மிக உயரமான மரங்களில் கூடு கட்டும். மரங்களில் கூடுகள் பொந்துகளாக இருக்கும். பெண் பறவை (Interesting Facts About Hornbill Bird) பொந்துக்குள் சென்று அமர்ந்தவுடன், ஆண் பறவை தனது உமிழ்நீர் மற்றும் ஆற்றுப் படுகைகளில் இருந்து சேகரிக்கப்பட்ட ஈரமான மண்ணைக் கொண்டு கூட்டை மூடிவிடும். பெண் பறவைக்கு உணவளிக்க ஒரு சிறிய திறப்பை மட்டுமே விடும். பெண் தன் முழு இறக்கையையும் உதிர்த்து, மெத்தை போன்ற மேடையில் ஒன்று முதல் மூன்று முட்டைகளை இடும். சுமார் 7 வாரங்களுக்குப் பிறகு முட்டைகள் குஞ்சு பொரிக்கும். குஞ்சுகள் பிறந்தவுடன் பெண் பறவை கூட்டை உடைத்து வெளியே வரும். அதுநாள் வரை ஆண் பறவை பெண் பறவைக்கு பழங்கள் மற்றும் பூச்சிகளை சிறு துவாரத்தின் வழியாக உணவளிக்கும். குஞ்சு பொரித்த பிறகு ஆண் மற்றும் பெண் பறவைகள் ஒன்றாக குஞ்சுகளுக்கு உணவளிக்கின்றன.

உணவு

அனைத்துண்ணிகளான இருவாச்சி (Interesting Facts About Hornbill Bird) பூச்சிகள், சிறு விலங்குகள், பழங்கள் முதலியவற்றை உண்ணும். மேலும் அவற்றின் குறுகிய நாக்கினால் இரையை விழுங்க முடியாது. எனவே உணவை அலகு நுனியில் இருந்து தூக்கி சிறிது சிறிதாக அலகின் உட்பகுதிக்கு நகர்த்தப்படுகிறது. சில இருவாச்சிகள் உணவுடன் தொடர்புடைய ஒரு நிலையான இடத்தில் வாழ்கின்றன. சில இருவாச்சிகள் பழ மரங்களின் பரப்பு துண்டு துண்டாக இருப்பதால் உணவுக்காக நீண்ட தூரம் பறக்க வேண்டியுள்ளது.

Latest Slideshows

Leave a Reply