Interesting Facts About Horseshoe Crab : குதிரைவாலி நண்டு பற்றிய உண்மையான தகவல்கள்

பூமியில் மனிதர்களுடன் கோடிக்கணக்கான உயிரினங்கள் சேர்ந்து வாழ்கின்றன. பூமியில் வாழும் ஒவ்வொரு உயிரினங்களுக்கும் ஒரு முக்கியத்துவமும், காரணமும் உள்ளது. இயற்கையின் வடிவமைப்பில் சில உயிரினங்கள் மிகவும் தனித்துவமானவை மற்றும் பயனுள்ளவையாக இருக்கின்றன. மனித வாழ்க்கை பல நேரங்களில் விலங்குகளை அதிகம் சார்ந்துள்ளது. இந்த பூமியில் இரத்தம் மிகவும் மதிப்புமிக்க ஒரு உயிரினமாக உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? உலகிலேயே இந்த உயிரினத்தின் இரத்தம்தான் மிகவும் மதிப்புமிக்கது என்று கூறப்படுகிறது. இந்த உயிரினத்தின் இரத்தம் சேமிப்பகத்தில் வைக்கப்பட்டு மருத்துவ நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த உயிரினம் குதிரைவாலி நண்டு (Horseshoe Crab) ஆகும்.

Interesting Facts About Horseshoe Crab - மருத்துவகுணம் நிறைந்தது :

குதிரைவாலி நண்டின் (Horseshoe Crab) இரத்தமானது மருத்துவத்துறைக்கு இன்றியமையாத ஆதாரமாகும். அதன் நீல நிற இரத்தமும், நுண்ணிய அளவு பாக்டீரியா மாசுபாட்டைக் கண்டறியும் திறனும் மருத்துவத்தில் பல வழிகளில் பயன்படுகிறது. குதிரைவாலி நண்டு இரத்தத்தில் இருக்கும் தனித்துவமான ‘அமிபோசைட்’ தனிமைப்படுத்தப்பட்டு உணவு மற்றும் மருந்து நிர்வாகம் Food And Drug Administration (FDA) சோதனையில் பயன்படுத்தப்படுகிறது. இந்த குதிரைவாலி நண்டுகளின் (Interesting Facts About Horseshoe Crab) இரத்தத்தில் ‘ஹீமோசயன்’ உள்ளது. இவற்றின் இரத்தம் “நீல தங்கம்” என்று அழைக்கப்படுகிறது. மேலும் இந்த நண்டுகள் மிகவும் உயர்ந்த விலையில் விற்கப்படுகிறது. குதிரைவாலி நண்டின் 1 லிட்டர் இரத்தத்தின் விலை 15 ஆயிரம் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.12 லட்சம்) என தகவல்கள் தெரிவிக்கின்றன.

450 மில்லியன் ஆண்டுகள் பழமையான உயிரினம் :

இந்த குதிரைவாலி நண்டு சுமார் 450 மில்லியன் ஆண்டுகள் பழமையான உயிரினமாகும். மேலும் டைனோசர்களை விட பழமையான உயிரினம் என்று கூறப்படுகிறது. 1960-களின் தொடக்கத்தில் மருத்துவ விஞ்ஞானிகள் குதிரைவாலி நண்டு இரத்தத்தைப் பயன்படுத்தி பாக்டீரியாவின் நிமிட அளவைக் அடையாளம் காண முடியும் என கண்டறிந்தனர். மருத்துவ வணிகத்திற்கு மட்டும் சுமார் 6 மில்லியன் குதிரைவாலி நண்டுகள் பிடிக்கப்படுவதாக தகவல்கள் (Interesting Facts About Horseshoe Crab) தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நண்டுகளின் உடல்களிலிருந்து முப்பது சதவிகிதம் இரத்தம் அகற்றப்படுகிறது. இந்த செயல்முறையின் போது சில நண்டுகள் இறக்கின்றன. உயிர் பிழைக்கும் நண்டுகள் மீண்டும் கடலுக்குள் விடப்படுகிறது. இந்த குதிரைவாலி நண்டு அதிக விலைக்கு விற்பதற்கு முக்கிய காரணம் அதன் மருத்துவ குணமாகும். இந்த நண்டு இரத்தத்தில் ‘லிமுலஸ் அமெபோசைட் லைசேட்’ Limulus Amoebocyte Lysate (LAL) என்ற புரதம் அதிகமாக உள்ளது. மேலும் காய்ச்சல் மற்றும் மரணம் வரை கடுமையான எதிர்விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய எண்டோடாக்சின்களைக் கண்டறிய இந்த ‘லிமுலஸ் அமெபோசைட் லைசேட்’ பயன்படுகிறது. கடந்த 2016-ம் ஆண்டில் இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் International Union For Conservation Of Nature (IUCN) குதிரைவாலி நண்டுகளை மிகவும் பாதுகாக்கக்கூடிய உயிரினங்கள் பட்டியலில் சேர்த்தது.

Latest Slideshows

Leave a Reply