Interesting Facts About Mongoose : கீரிப்பிள்ளைகள் பற்றிய உண்மையான தகவல்கள்

இந்த உலகில் வாழும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விலங்கு பிடிக்கும். சிலர் தங்களுக்குப் பிடித்த விலங்குகளை வீட்டில் வைத்து வளர்க்கிறார்கள். விலங்குகளுக்கு பார்த்து பார்த்து உணவு வாங்குகிறார்கள். ஆனால் அந்த விலங்குகளைப் பற்றி அவர்களுக்குத் தெரியாது. அதாவது, அந்த விலங்கின் மற்ற பெயர்கள், அதன் ஆயுட்காலம் போன்ற பல தகவல்கள் அவர்களுக்குத் தெரியாது. நம் பதிவில் ஒவ்வொரு நாளும் விலங்குகளைப் பற்றி பதிவிட்டு வருகிறோம். இந்நிலையில், இன்று கீரிப்பிள்ளை (Interesting Facts About Mongoose) பற்றி பார்க்கலாம்.

கீரிப்பிள்ளைகள் (Interesting Facts About Mongoose)

உருவமைப்பு

கீரிப்பிள்ளை இனத்தில் 34 வகைகளை கொண்டுள்ளன. இதன் நீளம் 24 முதல் 58 செ.மீ வரை (வால் தவிர), மேலும் 320 கிராம் முதல் 5 கிலோ எடை வரை கொண்ட கீரி இனங்கள் உள்ளன. சில வகை கீரி இனங்கள் (Interesting Facts About Mongoose) பெரும்பாலும் தனியாகவே உணவு தேடி வாழ்கின்றன. மற்றவை குழுக்களாக வாழ்ந்து இரையைப் பகிர்ந்து கொள்கின்றன.

வாழிடங்கள்

இந்திய சாம்பல் நிற கீரிப்பிள்ளைகள் இந்திய துணைக்கண்டம், தென்கிழக்கு ஆசியா மற்றும் மேற்கு ஆசியா முழுவதும் காணப்படுகின்றன. அவை காடுகள், திறந்தவெளிகள், புதர் காடுகள், விவசாய நிலங்கள், பாறைப் பகுதிகள் மற்றும் மனித வாழ்விடங்களில் (Interesting Facts About Mongoose) பரவலாகக் காணப்படுகின்றன. அவை துளைகள், புதர்கள், உலர்ந்த மரக் பொந்துகள், குழாய்கள் ஆகிய இடங்களில் தங்குகின்றன.

உணவுகள்

Interesting Facts About Mongoose - Platform Tamil

கீரிப்பிள்ளையின் உணவு பாம்பு என்பது தான் பலருக்கும் தெரியும். உண்மையில் இவை அனைத்துண்ணிகள். இவற்றின் உணவுப் பட்டியல் மிக நீளமானது. அவை பாம்புகள், பறவைகள், முட்டைகள், பறவைக் குஞ்சுகள், பல்லிகள், தவளைகள், வெட்டுக்கிளிகள், தேள்கள், பல்லிகள் (Interesting Facts About Mongoose) மற்றும் நண்டுகள் போன்ற உயிரினங்களையும், பழங்கள் மற்றும் வேர்கள் போன்ற தாவர உணவுகளையும் சாப்பிடுகின்றன.

இனப்பெருக்க முறை

பொதுவாக தனியாகக் காணப்படும் கீரிகள், இனப்பெருக்க காலத்தில் மட்டுமே குழுக்களாக கூடும். அவை பெரும்பாலும் மார்ச், ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதங்களில் இனப்பெருக்கம் செய்கின்றன. அவற்றின் கர்ப்ப காலம் 60 நாட்கள் ஆகும். ஒரே நேரத்தில் இரண்டு முதல் நான்கு குட்டிகள் பிறக்கின்றன. குட்டிகள் ஆறு முதல் ஒன்பது மாதங்களுக்கு பிறகு தனியாக வாழத் தொடங்குகின்றன.

கீரிப்பிள்ளை முடிகள்

இந்திய வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கீரிகளை கொல்வது தடைசெய்யப்பட்டுள்ளது. இருப்பினும், பெயிண்ட் பிரஷ்கள் மற்றும் ஷேவிங் பிரஷ்களுக்காக அதிக எண்ணிக்கையில் கீரிகள் கொல்லப்படுகின்றன. கீரிப்பிள்ளையின் (Interesting Facts About Mongoose) முடி லட்சக்கணக்கில் விற்கப்படுகின்றன. ஒரு கிலோ கீரி முடியை சேகரிக்க கிட்டத்தட்ட 50 கீரிகள் கொல்லப்படுகின்றன. ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட 150 கிலோ கீரிகளின் முடி கடத்தப்படுவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. பிரஷ்களுக்காக ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கீரிப்பிள்ளைகள் கொல்லப்படுகின்றன. இன்று இந்தியா முழுவதும் கீரிப்பிள்ளைகள் ஏராளமாகக் காணப்பட்டாலும், அவை தொடர்ந்து அதே வழியில் கொல்லப்பட்டால், அவற்றின் எதிர்காலம் கேள்விக்குறியாகும்.

Latest Slideshows

Leave a Reply