Interesting Facts About Parrots : கிளிகள் பற்றிய சில சுவாரசியமான தகவல்கள்

இந்த பறவைகளின் உலகத்தில் கிளிகள் மட்டும் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளன. ஏனெனில் கிளிகளின் அழகான நிறங்கள், பேசும் திறன், புத்திசாலித்தனமான நடத்தை என பல தனித்துவ பண்புகளை கொண்டுள்ளன. இந்தியா உள்ளிட்ட ஆசியா நாடுகளில் கிளிகள் மக்களின் வாழ்க்கையின் ஒரு பகுதியாகவும், கலாசாரத்தின் ஒரு கூறாகவும் இருக்கின்றன. இந்த பதிவில் கிளிகளின் வகைகள், அறிவுத்திறன், வாழ்க்கை முறை, பேசும் தன்மை, உணவுப் பழக்கங்கள் (Interesting Facts About Parrots) போன்ற பல சுவாரசியமான தகவல்களை பார்க்கலாம்.

கிளிகள் பற்றிய சில தகவல்கள் (Interesting Facts About Parrots)

கிளிகளின் வகைகள்

உலகம் முழுவதும் 87 இனங்களை (குடும்பங்கள்) சேர்ந்த 372 வகையான கிளிகள் உள்ளன. இதில் காக்டீல், லவ்பேர்ட்ஸ், புட்ஜெரிகர் போன்ற சிறிய வகை கிளிகளும், மக்கா, காகடூ, அமேசான் கிளி போன்ற பெரிய வகை கிளிகளும் பொதுவாக செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படுகின்றன. மேலும் நம் இந்தியாவில் மட்டும் 11 வகையான கிளிகள் இருப்பதாக சேலம் பறவையியல் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

கிளிகளின் அறிவுத்திறன்

கிளிகள் மற்ற பறவைகளை விட மிகுந்த அறிவுத்திறன் கொண்ட பறவையாகும். அவை மனித குரலை நகலெடுக்கும் திறன், கருவிகளை பயன்படுத்தும் திறன், கற்றதை நினைவில் வைக்கும் நினைவாற்றல் திறன் போன்ற அறிவுத்திறன்களை கொண்டுள்ளன. இதற்கு உதாரணமாக மேற்கத்திய நாடுகளில் ‘அலெக்ஸ்’ என்ற ஆப்பிரிக்க சாம்பல் நிற கிளி பற்றிய ஆராய்ச்சியானது பல வருடங்களாக நடைபெற்றது. இந்த ஆராய்ச்சியின் முடிவில் அந்த ‘அலெக்ஸ்’ கிளி 100க்கும் மேற்பட்ட சொற்களை கற்றுக்கொண்டது மட்டுமில்லாமல், வடிவங்கள், எண்கள் மற்றும் நிறங்களை வேறுபடுத்தி காட்டியது.

கிளிகளின் பேசும் திறன்

கிளிகளின் இனங்களில் அலெக்ஸாண்டிரியன் கிளிகள், படிகுலம்பு கிளிகள், ஆஃப்ரிக்கன் கிரே கிளிகள் என இந்த மூன்று வகையான கிளிகள் பாடல், சொற்கள் மற்றும் பிற ஒலிகளை கற்றுக்கொள்ள (Interesting Facts About Parrots) பயிற்சி அளித்தால் எளிதாக கற்றுக் கொள்கின்றன. மேலும் இவை உண்மையில் நாம் பேசும் மொழியை புரிந்துகொண்டு, அவற்றின் நாக்கின் உதவியுடன் மனித ஒலிகளை உருவாக்குவதில் வல்லமை பெற்றவை. 

Interesting Facts About Parrots - Platform Tamil

கிளிகள் வாழும் இடங்கள்

கிளிகள் பெரும்பாலும் ஆசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, தென்கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா போன்ற (Interesting Facts About Parrots) பகுதிகளில் காணப்படும் மழைக்காடுககளிலும், புட்ஜெரிகர் போன்ற சில கிளிகளின் இனங்கள் பாலைவனத்தின் விளிம்புகளிலும் வாழ்கின்றன.

கிளிகளின் உணவுப் பழக்கங்கள்

கிளிகள் பழங்கள், பூசணிக்காய், விதைகள், காய்கறிகள், பூக்கள், வேர்க்கடலை, பூச்சிகள் மற்றும் சிறு விலங்குகள் போன்றவற்றை உணவாக உண்கின்றன. மேலும் சில வகையான கிளிகள் மிளகு விதைகளை விரும்பி உண்கின்றன அதனால் ‘மிளகுக் கிளி’ என பெயர் வைத்து அழைக்கப்படுகின்றன.

Latest Slideshows

Leave a Reply